நாட்டில் நிலவும் கொவிட் 19 தொற்றுநோய் நிலைமை காரணமாக சேவை பெறுநர்கள் மற்றும் பணியாட்டொகுதியின் சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு கல்வி அமைச்சின் மக்கள் சந்திப்பு தினத்தை மறுஅறிவித்தல் வரையில் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மக்கள் சந்திப்பு தினம் மீண்டும் நடைபெறுவது தொடர்பான அறிவித்தல் அமைச்சின் இணைய தளத்தில் அறிவிக்கப்படும் என்பதுடன் அதுவரையில் சேவை பெறுநர்கள் தமது மேன்முறையீடுகளையும் கடிதங்களையும் பிரதான நுழைவாயிலின் பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைக்க முடியும்.