கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
பிள்ளைகளது கருத்துக்களில் நெகிழ்வு மனப்பாங்கு ஏற்படுவது குழந்தைப் பருவத்தில் ஆகும், வாழ்க்கையில் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய அடித்தளத்தினை உருவாக்கி அந்த நற்பண்புகளை மேம்படுத்துவதற்கும், பிள்ளைகள் மத்தியில் கூட்டு மனப்பாங்கு, ஒத்துணர்வு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை உருவாக்குவதற்கும் சாரணர் இயக்கமானது பெரும் பணியாற்றுகின்றது என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.
இலங்கையில் குருளைச் சாரணர் மாணவர்களை மேலும் முன்னேற்றும் குறிக்கோளுடன் “தேசத்தின் சகல பிள்ளைகளையும் குருளைச் சாரணராக்குவோம்” என்ற தலைப்பில் ஆசிய பசுபிக் வலயத்தின் பங்களிப்புடன் நடாத்தப்பட்ட விசேட நிகழ்ச்சித் தொடரின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று (20) காலை கொழும்பு ஹில்டன் விடுதியில் நடைபெற்ற மேற்படி நிகழ்விற்கு இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் மெரில் குணதிலக்க, தலைமை ஆணையாளர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், நிறைவேற்றுக் குழுத் தலைவர் மற்றும் மாவட்ட ஆணையாளர்கள் உட்பட சாரணர் முகாமைத்துவத்தின் பிரதிநிதி அலுவலர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.
1907 ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்தவரான பேடன் பவல் பிரபு அவர்களால் உலக சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1912 ஆம் ஆண்டு ஜோர்ஜ் ஸ்டீவன்சன் அவர்கள் இலங்கையில் சாரணர் இயக்கத்தினை ஆரம்பித்த அதேவேளை, தற்போது 216 உலக நாடுகளில் 40 மில்லியனுக்கும் அதிகமான 5 – 24 வயதெல்லையையுடைய மாணவ மாணவியரை உள்ளடக்கியதாக குருளை, கனிஷ்ட, சிரேஷ்ட கபில கல்யாண பேரேரா, பிரதித் தலைமை ஆணையாளர் ஜனப்ரித் பிரணாந்து, குருளைச் சாரணர் உதவி ஆணையாளர், கருத்திட்ட தலைவி வத்சலா விஜேவிக்கிரம, சிரேஷ்ட ஆணையாளர்கள் என்ற பல்வேறு வயதுப் பிரிவுகளின் கீழ் மிகச் சிறப்பாக இவ்வியக்கம் செயற்படுத்தப்படுகின்றது.
எமது நாட்டில் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களை ஒற்றுமையாக இணைக்கக் கூடிய பாலமாக, காலத்தின் தேவைப்பாட்டினை மிகச் சரியாக அடையாளம் கண்டு அதற்கென செயற்படுவதற்கான பொறுப்பு சாரணர் இயக்கத்திற்கு உள்ளதென அமைச்சர் இதன்போது சுட்டிக் காட்டினார். அத்துடன் பிள்ளைகளது கற்றல் நடவடிக்கைகளைப் போலவே இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு பிள்ளைகளை பழக்கப்படுத்தி, அவர்களுக்கு அவசியமான ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் இலங்கை சாரணர் இயக்கத்திற்குள்ள இயலுமை தொடர்பிலும் அமைச்சர் இதன் போது மேலும் சுட்டிக்காட்டினார்.