“சிங்கள – தமிழ் மக்களுக்கிடையிலான தொடர்பாடலை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனில் தெற்கில் உள்ளவர்கள் தமிழ் மொழியை கற்பதோடு வடக்கில் உள்ளவர்களுக்கும் சிங்கள மொழியை கற்பிக்க வேண்டும். சிங்கள மொழியை கற்பதில் வடக்கில் பாடசாலை மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். அந்நடவடிக்கையினை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு எமது அரசு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது” என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.
அனுராதபுரம் லங்காராமாதிபதி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி தேரோ அவர்களை சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்இ
“வரட்சி வலயத்தில் விவசாய அபிவிருத்திக்குரியாதன சகல துறைகளையும் கொண்ட முழுமையான விவசாய பீடக் கட்டிடமொன்று ஜப்பான் அரசின் நிதியுதவியின் கீழ் எமக்கு கிடைத்துள்ளது. விசேடமாக சந்தைப்படுத்தல் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து அதன் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். வட மாகாண மக்களது கல்விஇ விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதற்கு எமது அரசாங்கம் அவசியமான திட்டங்களைத் தற்போது தயாரித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது” எனத் தெரிவித்தார்.
இந்த பயணத்தின் போது கல்வி தொடர்பில் விசேடமாக ஆராய்ந்து பார்ப்பதற்கு தமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததெனவும்இ வட மாகாணத்தின் சகல கல்விசார் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்துஇ அந்தந்த பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைஇ ஆசிரிய பயிற்சி தேவைப்பாடுகள்இ தேசிய பாடசாலைகளை அடையாளம் காணல் ஆகிய பொதுப் பிரச்சினைகள் தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக் கொண்டதோடு அவை தொடர்பில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற விதம் பற்றி இரண்டு வாரங்களுக்கொரு தடவை அறிக்கைகளைப் பெற்று பின்னாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“சிங்கள – தமிழ் இனங்களுக்கிடையில் காணப்படுகின்ற மொழிப் பிரச்சினையை நாம் வெகு சீக்கிரமாக தீர்த்துவிட வேண்டும். சிங்கள மொழியைக் கற்பதற்கு பெரும்பாலான தமிழ் மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கான அவசியமான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். அதன் மூலமாக மற்றையவர்களை அடையாளம் காண்பதற்கான ஆற்றல் அவர்களுக்கு கிடைக்கின்றது.” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
- Ministry
- Circulars
- Ministry Structure
- Static Reports
- Procurement Notices
- Special Projects
- Divisions
- Academics