கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இம்முறை சாதாரண தர பரீட்சையை நடாத்துதல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் நடாத்துவதாயின் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் பற்றிய இறுதி முடிவினை எதிர்வரும் பத்து நாட்களுக்குள் பெற்றுத் தருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். சுகாதார பாதுகாப்பு தொடர்பாக நாட்டில் தற்போது நிலவும் நிலைமையில் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் அதன் பின்னணி தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் இணைந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை தோற்றம் தரம் 11 மாணவர்களுக்கு உரிய பாட விதானங்கள் வகுப்பறை மட்டத்திலும் அல்லது இயங்கலை (ஒன்லைன்) முறைமையின் கீழ் தற்போது எந்தளவுக்கு நிறைவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பில் ஆராயும் முகமாக கல்வி அமைச்சு ஆசிரியர்களிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றினையும் ஏற்பாடு செய்துள்ளதாக இச்சந்திப்பில் இணைந்து கொண்ட கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் நிலைமையில் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட தீர்மானம் தொடர்பில் ஒருசில தரப்பினர் பல்வேறான கருத்துக்களை தெரிவிக்கின்ற போதிலும், தொடர்ச்சியாக பாடசாலைகளை மூடி வைத்து பிள்ளைகளின் எதிர்காலத்தை மூடி வைத்திட முடியாதெனவும், பிள்ளைகளின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தாது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பது என்பது அதன் அர்த்தம் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பாடசாலைகளை திறப்பதற்கு முன்னதாக அது தொடர்பில் மாகாண மட்டத்தில் முன்னோடி கலந்துரையாடல்களை மேற்கொண்டு, சுகாதார தரப்பினரின் முழுமையான பங்களிப்புடன், பாடசாலை அதிபர்களது தலைமையில் பாடசாலை மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள சுகாதார மேம்பாட்டு குழுக்களுடன் கலந்துரையாடி மிகப் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொண்டது, பொறுப்பற்ற நிலைமையில் அல்ல என்றும் கல்வி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாடசாலைக்கு பிள்ளைகளின் வருகையில் முன்னேற்றம் படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்த்த போதிலும், பாடசாலை ஆரம்பித்த உடனே பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர் பின்வாங்குவது இப்படியொரு சூழ்நிலையில் இயல்பானதே எனத் தெரிவித்த அமைச்சர், சகல பாடசாலைகளிலும் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அவசியமான வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், மத்திய மாகாணத்திற்கு 65 இலட்சம், தென் மாகாணத்திற்கு 49 இலட்சம், வடக்கு மாகாணத்திற்கு 36 இலட்சம், கிழக்கு மாகாணத்திற்கு 46 இலட்சம், வடமேல் மாகாணத்திற்கு 56 இலட்சம், வடமத்திய மாகாணத்திற்கு 30 இலட்சம், ஊவா மாகாணத்திற்கு 38 இலட்சம், சபரகமுவ மாகாணத்திற்கு 46 இலட்சம் என்ற வகையில் சுமார் 370 இலட்சம் ரூபா நிதியை சுகாதார பாதுகாப்பு வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காக கல்வி அமைச்சு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
விமர்சனங்களுக்கு பயந்து எதனையும் செய்யாதிருப்பது பிள்ளைகளுக்கு செய்யும் அநீதி என்பதால், தற்போதைய சூழலுக்கு பொறுப்புடன் முகம் கொடுக்கும் வகையில் பாடசாலைகளை மீள திறப்பதற்கு தீர்மானம் எடுத்ததாகவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்து பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வது பற்றிய கவனத்தை செலுத்தி, சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்வது சகல தரப்பினரும் நிறைவேற்ற வேண்டிய சமூக பொறுப்பாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேற்படி சந்தர்ப்பத்திற்கு ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுசி பெரேரா, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க உட்பட பலரும் பங்கேற்றனர்
Wednesday, 02 December 2020
/
Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்