இந்நாட்டின் கல்விக் கட்டமைப்பில் முன்பள்ளி கல்வி தொடர்பாக வழங்க வேண்டிய முன்னுரிமை மற்றும் விசேடத்துவம் தொடர்பில் அடிப்படை கவனத்தினை செலுத்தி ‘முன்பள்ளிக் கல்வி தொடர்பிலான தேசியக் கொள்கை’ ஒன்றினை இயற்றுதல் பற்றியதான விசேட கலந்துரையாடலொன்று 2020–11-19 ஆம் திகதி கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்களின் தலைமையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றது.
ஆரம்பக் கல்வித் துறையின் நிபுணர்களது ஆலோசனைகளுக்கமைவாக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள மாதிரிக் குறிப்பு தொடர்பில் கூடுதலாக ஆய்விற்கும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கும் பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் தலைமையில் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று அதன் போது நியமிக்கப்பட்டது. அதன் படி குறித்த குழுவின் பரிந்துரைகளுடன் இது பற்றிய இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும் பொருட்டு 2020-12-11 ஆம் திகதி கல்வி அமைச்சரின் தலைமையில் மேற்படி குழு மீண்டும் கூடவுள்ளது.
இக்கலந்துரையாடலில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திஇ முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்விஇ பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தஇ பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் மற்றும் கல்வி அமைச்சுஇ தேசிய கல்வி நிறுவகம்இ மாகாண சபைகள்இ தேசிய சிறுவர் செயலகம் உட்பட பல நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்குபற்றினர்.