சகல பாடசாலைகளிலும் ஆங்கில திறன் வகுப்பறைகளை ஆரம்பித்தல் தொடர்பான நாடளாவிய வேலைத்திட்டம் – தென் மாகாணத்திற்கு இதன் கீழ் 200 திறன் வகுப்பறைகள்…
பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்தவதற்காக நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆங்கில திறன் வகுப்பறைகளை (நுபெடiளா ளுஅயசவ ஊடயளள) ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் சுiபாவ வழ சுநயன கருத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டள்ளது.
தரம் 3 இலிருந்து தரம் 8 வரையிலான பாடசாலை பாடத்திட்டத்தில் ஆங்கில பாடத்திற்குரியதான பாடவிதானங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாடத்திட்டங்களை உள்ளடக்கிய இணையதள உள்ளீட்டினை (யிp) அடிப்படையாகக் கொண்டு இந்த ஆங்கில திறன் வகுப்புகள் நடைமுறைப்படுத்தப்படும்.
தற்போது நாடு முழுவதுமாக 837 பாடசாலைகளின் சுமார் 510,745 மாணவர்கள் இந்த நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். வடக்கு, சபரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணத்தின் பாடசாலைகளில் தற்போது இந்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
2022 ஆம் வருடத்தில் நாட்டின் சகல பாடசாலைகளையும் உள்ளடக்கியதாக ஆங்கில திறன் வகுப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ள அதேவேளை, தென் மாகாண நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் படிமுறையின் கீழ் எதிர்வரும் சில மாதங்களில் காலி மாவட்டத்தின் 100 பாடசாலைகளில் இதனை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் படிமுறையின் கீழ் தென் மாகாணத்தில் மேலும் 100 பாடசாலைகளுக்கு ஆங்கில திறன் வகுப்புகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பிள்ளைகளுக்கு பாடசாலையின் விடயப் பொறுப்பு ஆசிரியரின் ஒத்துழைப்புடன் ஆங்கில திறன் வகுப்பில் இணைந்து கொள்ள முடியும் என்பதுடன்இ இது தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.
தென் மாகாணத்தில் இருநூறு பாடசாலைகளில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடலுக்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன அவர்கள் மற்றும் தென் மாகாண ஆளுநர் விலீ கமகேஇ சுiபாவ வழ சுநயன கருத்திட்டத்தின் பிரதம செயற்பாட்டாளர் அசாத் ஓமார்இ சுiபாவ வழ சுநயன நிறுவனத்தின் கருத்திட்ட முகாமையாளர் லோரன்ஸ் வின்சன்ட் அவர்களும்இ கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் புத்திக விக்கிரமாதர அவர்களும்இ தென் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் திசாநாயக்க அவர்களும்இ தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா அவர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
Monday, 30 November 2020
/
Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்