தற்போது நிலவுகின்ற கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக செயலிழந்து காணப்படுகின்ற பிள்ளைகளது கற்றல் நடவடிக்கைகளை தொலைக்கல்வி முறைமையினூடாக மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு மற்றும் கல்வி மறுசீரமைப்பு> திறந்த பல்கலைக்கழங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்துகின்ற தொடர் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான விடயங்களை இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினார்.
தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற “குருகுலம்” மற்றும் “ஈ-தக்சலாவ” நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மேலதிகமாக 3ஆம் தவணைக்குரிய பிரதான பாடங்களை கவரும் குறிக்கோளுடன் இந்த புதிய நிகழ்ச்சித் தொடர் தேசிய தொலைக்காட்சியின் ஐ அலைவரிசை மற்றும் நேத்ரா அலைவரிசை ஆகியவற்றினூடாக தற்போது ஒரு நாளைக்கு 16 மணித்தியாலங்கள்;; ஒளிபரப்பு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை எதிர்காலத்தில் எழும் தேவைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி நேரங்களை அதிகரிப்பதற்கும் இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தினையும் இணைத்ததாக வானொலியினூடாக ஒலிபரப்பு செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் தெரிவித்தார். இதன்போது நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் மற்றும் சகல பிள்ளைகளும் பங்குபற்றக் கூடிய வகையில் பல ஊடகங்கள் வாயிலாக இந்நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவைப்படுகளை அடையாளம் கண்டு அச்சு பாடத் தொடராகவும் பிள்ளைகளுக்கு கிடைக்க வைப்பதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்கு மேல் மாகாணத்தின் பிரதான பாடசாலைகளின் அதிபர்களது ஒத்துழைப்புடன் தேர்ச்சி பெற்ற 200 ஆசிரியர்களது பங்களிப்புடனும் தமிழ் மொழி மூலமான நடவடிக்கைகளுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதான பாடசாலைகளின் ஆசிரியர்களது பங்களிப்பினையும் பெற்று 6 ஒலி அரங்குகளில் ஒலிப்பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு நவம்பர் மாதம் 16ஆம் மு.ப. 4.00 மணிமுதல் வாரத்தின் 7 நாட்களிலும் ஒலிபரப்பு செய்யப்படுவதுடன் மேலும் தொடர்ச்சியாக ஒலிப்பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும், பாடசாலைகள் மீள் ஆரம்பிக்கப்பட்டாலும் மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தினை இடைநிறுத்தாது தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் இடம்பெறுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாடசாலைகளில் தரம் 3 இலிருந்து க.பொ.த. சாதாரண தரம் வரையிலான பிரதான பாடங்கள், க.பொ.த. உயர் தரத்தின் 4 பாடத்துறைகள் மற்றும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சையை இலக்காகக் கொண்டு விசேட மீட்டல் பாடத் தொடரையும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக செயற்படுத்தவது கல்வி அமைச்சின் குறிக்கோளாகும். இந்த நிகழ்ச்சித் திட்டத்தினை எதிர்வரும் காலங்களில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் மொபிடெல் போன்ற நிறுவனங்களையும் தொடர்புபடுத்தி மேலும் விரிவுபடுத்துவதற்கும் தேசிய கல்வி நிறுவகத்தினூடாக யூரியூப் அலைவரிசை மூலமாகவும் பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது தெரியப்படுத்தப்பட்டது. இது தொடர்பில் பிள்ளைகளுக்கு எழும் சந்தேகங்களை கலந்துரையாடுவதற்கு உரிய ஆசிரியர்களை தொடர்பு கொள்ளும் வகையில் 1377 என்ற விசேட இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் 0117601702, 071449131 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் வாயிலாகவும் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள முடியும். மேற்படி வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களுக்கும், அமைச்சின் செயலாளர்களுக்கு, தேசிய கல்வி நிறுவகத்திற்கு, விடயப் பணிப்பாளர்களுக்கு, அதிபர்கள் மற்றும்