ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களது சுகாதார நிலைமை மற்றும் ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில்இ மாணவர்களது தகவல்களை கல்வி அமைச்சின் வலைத்தளத்தில் காணப்படும் தகவல் படிவத்தில் உள்ளடக்குதல் வேண்டும். அதற்கு hவவி:ஃஃiகெழ.அழந.பழஎ.டம என்ற வலைத்தளத்தை பயன்படுத்த முடியும்.
உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு இம்முறை தோற்றும் சகல மாணவர்களையும் பாதுகாப்பான முறையில் பரீட்சைக்கு தோற்ற வைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளமையால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகும் கம்பஹா மாவட்டம் உட்பட பிரதேசத்தின் மாணவர்கள்இ கம்பஹா மாவட்டத்திற்கு வேறு பிரதேசங்களில் இருந்து வருகை தரும் மாணவர்கள் இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறெனினும்இ உரிய தகவல்களை சமர்ப்பிக்காமை பரீட்சைக்கு தோன்றுவதற்கு தடையாக அமையாது என்பதனை சகல மாணவர்களும் பெற்றோரும் கவனத்திற் கொள்ளவும்.