கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம், சுகாதார அமைச்சு, பொது சுகாதார பரிசோதகர்கள், நகர சபை உட்பட சகல உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியன இணைந்து ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு அவசியமான முன்னேற்பாடு நடவடிக்கைகளை சுகாதார பாதுகாப்புடன் மேற்கொண்டுள்ளன.
சுகாதார அமைச்சர், மற்றும் எமது அமைச்சின் இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொல, விஜித பேருகொட மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் உட்பட சகல பணியாட்டொகுதியினர் விசேடமாக நாட்டின் சகல பாகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கும் தனிப்பட்ட முறையில் விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்து பார்த்தனர்.மேற்படி சகல தரப்பினரின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியின் மூலம் நாளைய தினம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை வெற்றிகரமாக நடாத்த முடியும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2020/10/10 ஆம் திகதி மாலம்பே ராகுல மகளிர் வித்தியாலயத்தில் அமைக்கப்படும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான மண்டபத்தை பார்வையிட மேற்கொண்ட விஜயத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
இந்த பரீட்சையை நடாத்துவது தொடர்பில் நாடு முழுவதும் அதிகளவில் ஆர்வம் காணப்பட்டது. பெற்றோரைப் போலவே பிள்ளைகளும் பரீட்சையை நடாத்துவது தொடர்பில் எதிர்பார்ப்புடன் இருந்தனர். பரீட்சையை ஒத்தி வைப்பது என்பது அந்த பிள்ளைகளின் தைரியத்தை முழுமையாக மழுங்கடித்து விடும். இதன் காரணமாக சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் உரிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அத்துடன் அரச உத்தியோகத்தர்கள் ஆகிய தரப்பினரின் அர்ப்பணிப்புடன் இதற்கான நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்ள எம்மால் முடிந்தது.
தற்போதுகாணப்படுகின்றசுகாதாரபிரச்சினைகளுக்குமத்தியில்இவ்வாறானதொருபரீட்சையைநடாத்துவதென்பதுஅரசாங்கத்திற்குசவாலானவிடயமே. இருப்பினும்அனைத்துசுகாதாரஒழுங்குவிதிகளுக்குஅமைவாகமற்றும்மக்களதுபாதுகாப்பிற்குஎதுவிதபாதிப்பும்ஏற்படாதவாறுமேற்படிநடவடிக்கைகளைஏற்பாடுசெய்யஎங்களால்முடிந்தது.
அத்துடன் புகையிரத மற்றும் பஸ் போக்குவரத்து ஏற்பாடுகளும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் பிரதேசங்களில் விசேட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு இப்பிரதேசங்களில் இருந்தே பரீட்சைக்கு தோற்ற முடியும். மேலும் 1 ½ மீட்டர்இடைவெளியில்ஆசனங்கள்இடப்பட்டுள்ளது. அவசியமானஅனைத்துசுகாதாரஏற்பாடுகளும்எதுவிதசிக்கலும்இன்றிதிட்டமிடப்பட்டுஉள்ளது. இவ்விடயம்தொடர்பில்இரவுபகல்பாராதுபிள்ளைகளதுநலனுக்காகபணியாற்றியசகலதரப்பினருக்கும்தமதுநன்றிகளைதெரிவிப்பதாகவும்அமைச்சர் இதன்போதுதெரிவித்தார்.
மேற்படிநிகழ்வில்பரீட்சைஆணையாளர்நாயகம்பீ. சனத்பூஜித, கல்விஅமைச்சரின்பிரத்தியேகசெயலாளர்நலின் கம்லத், கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் புத்திக விக்கிரமாதர உட்பட பலர் இணைந்து கொண்டனர்.