நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் நிலைமையின் கீழ் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிய முழுமையான கவனம் செலுத்தப்பட்டுஇ பாதிப்பு நிலைமையை உச்ச அளவில் கட்டுப்படுத்தி பரீட்சையை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். இதற்கென கல்வி அமைச்சுடன் இணைந்ததாக சுகாதார அதிகாரிகள்இ இலங்கை பொலிஸ்இ போக்குவரத்து அதிகாரிகள் உட்பட சகல தரப்பினரும் பெற்றுக் கொடுக்கும் ஒத்துழைப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் இதன் போது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
க.பொ.த. உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை நடாத்துவது தொடர்பில் பரீட்சை நிலையங்கள் செயற்படும் விதம் மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளின் ஏற்பாடு தொடர்பிலும் சுகாதார பாதுகாப்பு முறைமைகளின் கீழ் பரீட்சையை நடாத்துவதற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பற்றியும் விளக்கும் வகையில் இன்று (09) கல்வி அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்விசேட ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தீபா கமகேஇ இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கஇ புகையிரத பொது முகாமையாளர் ஏ பீ ஜீ செனவிரத்னஇ பரீட்சை ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜிதஇ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரஇ கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (கல்விப் பண்புசார் விருத்தி) ஹேமந்த பிரேமதிலகஇ மேலதிக செயலாளர் (பாடசாலை அலுவல்கள்) எம்.எல்.டீ. தர்மசேனஇ கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் புத்திக விக்கிரமாதர உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இம்முறை ஒரு பரீட்சை நிலையத்தில் 160 மாணவர்கள் தோற்றக் கூடிய வகையில் நடாத்தப்படவுள்ள பரீட்சைக்கு கொவிட் காரணமாக தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில் விசேட பரீட்சை நிலையங்களை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் படிஇ வேறு பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களை அவர்களது சுகாதார பாதுகாப்பினை கவனத்திற் கொண்டு உரிய பொலிஸ் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட பரீட்சை நிலையங்களுக்கு இணைப்புச் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித இதன் போது தெரிவித்தார்.
அதன் படிஇ 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைக்காக மேலே குறிப்பிட்டவாறு அமைக்கப்பட்டுள்ள விசேட பரீட்சை நிலையங்கள் பற்றிய தகவல்கள் இதனோடு முன்வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான போக்குவரத்து தொடர்பில் பின்பற்றப்படும் விசேட வேலைத்திட்டம் குறித்து இதன் போது கருத்து தெரிவித்த புகையிரத பொது முகாமையாளர் ஏ.பீ.ஜீ. செனவிரத்ன அவர்கள்இ தனிமைப்பமடுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் தமது பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்கு இலகுவாக அமையும் வகையில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படும் விசேட புகையிரத பெட்டிகளைக் கொண்ட இரண்டு புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும்இ உரிய பொலிஸ் பிரதேசத்தில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் போக்குவரத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாக விசேட பஸ் போக்குவரத்து சேவையை நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
சகல பரீட்சை நிலையங்களும் தற்போது கிருமி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை சுகாதார பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைவாக முகக் கவசம் அணிந்து பரீட்சை வளாகத்திற்கு வருகை தருமாறு பெற்றோர்இ மாணவர்கள் மற்றும் சகல பணியாட்டொகுதியினரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் பிள்ளைகளின் சுகாதார பாதுகாப்பினை ஆபத்துக்கு உட்படுத்தாது அவர்கள் மிகச் சிறந்த மனநிலையுடன் பரீட்சைக்கு முகம் கொடுக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தல் சமூகத்தின் கடமை எனக் கருதி செயற்படுமாறு மக்கள் உட்பட சகல தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் இதன் போது மேலும் தெரிவித்தார்.