ஒரு நாட்டின் அனைத்து கல்விக் கொள்கைகளையும் செயன்முறை ரீதயாக செயற்படுத்தும் நிறுவனம் பாடசாலையாகும். மானுட கலாசாரத்தைக் பகிர்ந்து கொள்வதில்; முதன்மையான சக்தியாகக் (Driving Force) கல்வி திகழ்வதால் பாடசாலை எனும் சமூக கூட்டுத்தாபனத்திற்கு இன்றியமையாத பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாடசாலை ஒரு பிள்ளையின் வாழ்க்கைக்கு பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கக்கூடிய கேந்திர நிலையமாகும். 06 வயதில் பாடசாலைக்கு உள்வரும் பிள்ளையினது இரண்டாம் பெற்றார்களெனப்படுபவோர் அதிபர்களும் ஆசிரியர்களுமே ஆவர். மாணவர்களுக்கு அறிவைப் பெற்றுக் கொள்வதற்குஇ திறன்களை விருத்தி செய்து கொள்வதற்குஇ நேர் ரீதியான மனப்பாங்கை கட்டியெழுப்புவதைப் போன்றே வெற்றிக்காக சரியான பாதையை தெரிவு செய்து கொள்வதற்கு வழி காட்டுபவர்கள் அதிபர்களும் ஆசிரியர்களுமேயாவர்.
சமூகஇ பொருளாதாரஇ கலாசார பல்வகைமையுடன் கூடிய பிள்ளைகளுக்கு சமமான கல்வி வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் எதிர்காலத்தை தோற்றுவிப்பதில் ஆசிரியரால் நிறைவேற்றப்படும் பணியானது தனிச் சிறப்பானதாகும். உலகளாவிய அளவில் பொங்கிவரும் அறிவுப் பிரவாகத்தை சமநிலையில் பேணி தனது அனுபவத்துடன் கலந்து பொருத்தமான கற்றல் கற்பித்தல் முறையியல்களின் துணையுடன் பிள்ளைகளுக்கு ஊடுகடத்துபவர் ஆசிரியரே. நற்குணம்இ அறிவு மற்றும் வலிமையுடன் கூடிய சமநிலையான பிரஜையை நிர்மாணிப்பதற்கென அர்ப்பண சிந்தையுடன் பணியாற்றும் ஆசியர்கள் தமது நிகழ்கால தேசத்தின் நாளைய தினத்திற்கென பரந்த மனப்பான்மையுடன் தம்மை அர்ப்பணிக்கின்றனர். அதற்கிணங்கஇ பரம்பரை பரம்பரையாக கலாசாரத்தை ஒப்படைத்து மானிட வர்க்கத்தின் சக வாழ்விற்கு வழிகாட்டலை வழங்கவென தரணியில் உயர்வான தொழில் வாண்மையாளராக இருப்பவர் ஆசிரியரே.
ஆசிரியரின் விசேட கவனம் கற்பித்தல் பணியின்பால் செலுத்தப்பட்டுக் காணப்படினும் நிகழ்காலத்தில் அது தனிநபர் அபிவிருத்திஇசமூக அபிவிருத்திஇ மாணவர்களின் கற்றல் அனுபவங்களை பரந்ததொரு எல்லைக்கு இட்டுச் செல்லுதல் போன்ற துறைகள் பலவற்றுடன் இணைந்து காணப்படுகின்றது. சுமார் 30 வருடங்களுக்கு அப்பால் உள்ள உலகத்திற்குள் நுழையும் பிள்ளைகளை உருவாக்கும் ஆசிரியர் ஒருவர் எதிர் காலத்தை வெளிப்படையாக காணக் கூடிய ஒருவராக இருத்தல் வேண்டும். பெரும்பாலும் ஆசிரியர்கள் பெற்றாராகஇநண்பனாகஇஆலோசகராகஇ பாதுகாப்பவராக பல்வேறு வகிபாகங்களின் அடிப்படையில் செயலாற்றி மாணவர்களை சமூகத்தின் பெறுமதிமிக்க உறுப்பினர்களாவதற்கு வழிகாட்டும் அதேவேளைஇ மாணவர்களுக்கு சிறந்த முன்மாதிரியை வழங்குவதனூடாக அந்த பணியினை மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றுகின்றனர். பல்வேறு பிரவேசங்களினூடாக நிகழும் மாணவர் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கென விளைதிறன்மிக்க வகையில் பங்களிப்பு செய்ய வேண்டுமெனில்இ தொழில் ரீதியாக தேர்ச்சிமிக்க ஒருவராக ஆசிரியர் இருத்தல் வேண்டும். பாடசாலையைப் போன்றே சமூகத்திலும் தனது ஆசிரியர் வகிபாகத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுதலும் பல்வேறு தேவைகளுக்கு ஒத்த வகையில் தனது பணிகளை நிறைவேற்றுதலும் ஆசிரியர் ஒருவரின் பொறுப்பாகும்.
2030 ஆம் ஆண்டில் அடைந்து கொள்ள எதிர்பார்க்கும் நிலைபேறான அபிவிருத்தி இலக்காவுள்ள தரமான கல்வியை வழங்குதல் மற்றும் இலங்கையின் புதிய கல்வி சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அறிவுஇ திறன்இ மனப்பாங்கு மற்றும் பெறுமதி என்பவற்றுடன் கூடிய பாடசாலை சமூகமொன்றை உருவாக்குதல் அத்தியாவசியமாகின்றது. அதற்கென கல்விப் புலத்தினுள் ஆசிரியரால் நிறைவேற்றப்படும் சேவை எந்த அளவிற்கு தரமானது என்பது தொடர்பாக சுயமாக ஆராய்தலுக்கு உட்படுத்துதல் மிக முக்கியமாகின்றது. அதனூடாக ஆசிரியர் பணியை ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றும் உத்தேச தரங்களுக்கு அமைவாக பேணுவதற்கென சில வழிகாட்டல்கள் ஆசிரியருக்கு கிடைப்பதோடு அது மிகுந்த தரமிக்க வகையுடன் கூடிய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உதவியாக அமையும். ஏதேனுமொரு பணியின்போது பண்புத் தரம் மற்றும் தரஉறுதி என்பனஇ அப் பணிகளுடன் தொடர்;புடைய தனிநபர் தேர்ச்சியின் அடிப்படையில் தங்கியுள்ள அதேவேளைஇ சிறந்த கற்றல் கற்பித்தல் செயற்பாடொன்றை பாடசாலை முறைமையினுள் உறுதிப்படுத்திக் கொள்வதற்கென தேர்ச்சிகளில் பூரணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் இருப்பது அத்தியாவசியமாகின்றது.
சமூகஇபொருளாதார மற்றும் கலாசார வேறுபாடுகளின் எதிரில் ஆசிரியரின் பணி தினம் தினம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. பூகோள தன்மைகளுக்கு அமைவாகவும் தொழிற்; சந்தைக்குப் பொருத்தமானதுமான பிரஜைகளை உருவாக்க வேண்டியேற்படுவதைப் போன்றே எதிர்பாராத வகையில் முழு உலகும்; முகங் கொடுத்த கொவிட் 19 இடர் போன்ற சந்தர்ப்பங்களின் எதிரிலும் ஆசிரியர் முகங்கொடுத்த சவால்கள் ஏராளம். அவற்றிற்காக சளைக்காது முகங் கொடுத்து உலகளாவிய அளவில் ஆசிரியர்கள் நிரூபிக்கக் கூடிய பணியினை நிறைவேற்றியுள்ளனர். இலங்கையில் ஆசிரியர்கள் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தமது நேரம்; மற்றும் உழைப்பு என்பனவற்றை அர்ப்பணித்து இலட்சக் கணக்கான மாணவர்களின் அறிவுக் கண்ணை திறப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சி நிகழ்கால சமூகத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளது. கொவிட் 19 இடர் சமயத்தில்; தமது வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த பிள்ளைகளுக்காக இணையத்தளத்தினூடாக பாடங்களை பதிலீடு செய்வதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. குறைந்த வசதிகளாக இருப்பினும் கிடைக்கக் கூடிய வளங்களை முகாமைத்துவம் செய்து தரமான கல்வியை வழங்குவதற்கு அர்ப்பணிக்கும் இலங்கை தேசத்து ஆசிரியர்களை வெகுவாக பாராட்;ட வேண்டும்.
ஆசிரியர் ஒருவரின் தேர்ச்சி தொடர்பாக கவனஞ் செலுத்தும் போது மாணவர்களின் தேவைகள்இ பல்வகைமைஇ உள்ளார்ந்த ஆற்றல்களின் முக்கியத்துவத்தை இனங்கண்டு விளைதிறன்மிக்க கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுதல் மிகவும் இன்றியமையாததாகின்ற அதேவேளை அதற்கு அமைவாக பொருத்தமான உபாயங்கள்இ கற்றல் முறைகளையும் நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டும். தற்காலப்படுத்தப்பட்ட கற்றல் வளங்களையும் ஆக்கரீதியான கற்றல் சூழலையும் உருவாக்கி சிறப்பான முறையில் பயன்படுத்துவதைப் போன்றே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக தன்னால் இயன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் நவீன தொழில்நுட்ப முறையியல்களைப் பயன்படுத்தி மாணவர்களை அதற்கென ஈடுபடுத்துதல் மிகவும் முக்கியமாகும். மாணவர்களை சுய கற்றலுக்கு ஈடுபடுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் மாணவரது நிஜ வாழ்க்கை அனுபவங்களுடன் தொடர்புபடும் வகையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஒப்பிட்டுக்; கொள்ளுதல் அத்தியாவசியமாகின்றது. பல்வேறு திறன்களின் (சிந்தனை ஆற்றல்இமென்திறன்கள் மற்றும் ஆக்கரீதியான செயற்பாடுகள்) அபிவிருத்திக்காக மாணவர்களை ஈடுபடுத்த வேண்டியதோடு பொருத்தமான வகையில் கணிப்பீட்டுச் செயன்முறைகளையும் மதிப்பீட்டையும் நடைமுறைப்படுத்தி கற்றல் பேற்று அடைவை நோக்கி இட்டுச் செல்ல வேண்டியுள்ளது.
இதற்கென தொழில் வாண்மையாளர் எனும் அடிப்படையில் ஆசிரியரை வலுவூட்டுவதற்காக கீழ்க் குறிப்படப்பட்டுள்ள பிரதான விடயங்கள் தொடர்பாக கவனஞ் செலுத்;தி செயலாற்ற வேண்டியுள்ளதென சருவ தேச மட்டத்தில் கவனம் திரும்பியுள்ளது.
• ஆசிரியர் தொழில் தொடர்பாக சருவதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயல்புநிலைக்கு அமைவாக ஒழுங்கமைக்கப்பட்ட மதிப்பீட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி ஆசிரியர்களின் பணிகளை கண்காணித்தல்.
• வெவ்வேறு நாடுகளில் ஆசிரியர்கள் தொடர்பாக நடைமுறையிலுள்ள கொள்கைகள் மற்றும் உபாயங்கள் தொடர்பாக விளக்கமளித்து அவற்றை அபிவிருத்தி செய்தல்.
• தரமான கற்றல் கற்பித்தல் செயற்;பாடுகள் தொடர்பான ஆசிரியர்களின் கொள்ளாற்றலை விருத்தி செய்தல்.
• 2030 ஆம் ஆண்டளவில் அடைந்து கொள்ள வேண்டிய கல்வி தொடர்பான நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களை நோக்கி அண்மிப்பதற்காக ஆசிரியர்களின் அறிவுஇ கற்பித்தல் மற்றும் கண்காணித்தல் முறையியல்களை அபிவிருத்தி செய்தல்.
• தரமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக ஆசிரியர்களுக்கு வழிகாட்டலை வழங்குதல் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.
அவ்வாறேஇ முறைசார்ந்த நடைமுறையொன்றிற்கு அமைவாக ஆட்சேர்ப்பு செய்தல்இ பாடரீதியாக பயிற்றுவித்தல்இ தொழிற் தகைமைகளைப் பூர்த்தி செய்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்இ ஊக்குவித்தல் மற்றும் தேவையான வளங்களை வழங்குவதன் மூலம் ஆசிரியரை விளைதிறன்மிக்க தொழில் வாண்மையாளராக அபிவிருத்தி செய்ய முடியும்.
உலகளாவிய தரங்களுக்கு பொருந்தும் வகையில் இலங்கையின் ஆசிரியரை அபிவிருத்தி செய்வதற்காக கல்வி அமைச்சினால் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. ஆசிரியர்களுக்காக பல்வேறு தொழில் அபிவிருத்தி வாய்ப்புகளை வழங்குதல்இ தேசிய மட்டத்தில் வருடாந்தம் ஆசிரியர் மற்றும் அதிபர்களைப் மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டத்தை நடாத்துதலைப் போன்றே ஆசிரியர்களின் செயலாற்றுகைத் தரத்தை உயர்த்துவதற்காக அடுத்த வருடத்திலிருந்து சுய கணிப்பீட்டு முறையியலொன்றாக ஆசிரியர் தேர்ச்சி சட்டகமொன்றை பாடசாலை முறைமைக்கு அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறேஇ ஆசிரியர் தொழிலின் அபிமானத்தை உயர்த்துவதற்கென இலங்கையில் ஆசிரியர் சங்கங்களின் தலைவரான திரு.எம். ஜீ. மென்டிஸ் அவர்களின் பிரேரணைக்கு இணங்க 1990 ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய ரீதியில் சருவதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படுதல் இலங்கையர்களாகிய எமக்கு விசேட சந்தர்ப்பமாகும்.
2020 ஆம் ஆண்டில் “தீர்க்கமான சவால்களுக்கு தலைமைத்துவம் வழங்கி எதிர்காலத்தை மீள கட்டியெழுப்புபவர் ஆசிரியரே” எனும் கருப் பொருளின் அடிப்படையில் சருவதேச ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விசேடமாக உலகளாவிய அளவிலான தொற்றுநோய் நிலைமையின் எதிரில் ஆசிரியர்கள் முகங்கொடுத்த சவால்கள்இ அடைந்து கொண்ட நிரூபிக்கக் கூடிய நிலைமைகள்இ பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன் உருவாகியுள்ள மாற்றங்களுக்கு ஆசிரியர்கள் இயல்பாக்கம் பெற்றுள்ளமை என்பன தொடர்பாக இம்முறை விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தேசத்தின்; இலட்சக் கணக்கான மாணவர் சமூகத்தினுடைய வாழ்க்கைப் பாதையை ஒளிரச் செய்வதற்கு எண்ணற்ற வகையில் உழைக்கும் அதிசிறப்பான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் விலைமதிக்க முடியாத பணிக்கு பாராட்டுக்கள்! என்பது கல்வி அமைச்சின் வாழ்த்துக்களாகும்.