கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
இன்று (11) ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எதுவிதமான பிரச்சினையும் இன்றி நடாத்த முடிந்ததாகவும் இதே வகையில் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கும் நாளைய தினம் பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் இதற்கென அரசாங்கத்தால் சகலவிதமான சுகாதாரம்இ பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். பரீட்சை நடைபெற்ற இடங்களை மேற்பார்வை செய்யும் வகையில் டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்இ
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பிள்ளைகளை பரீட்சைக்குத் தோற்ற அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் நாங்கள் முதலில் பெற்றோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்இ நாடு முழுவதும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எவ்விதமான பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாக நிறைவடைந்தது. பெற்றோர் எம்முடன் தொடர்பு கொண்டு அரசாங்கத்திற்கு தமது நன்றிகளைத் தெரிவித்தனர். அது தொடர்பில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட பரீட்சையை மீண்டும் பிற்போட வேண்டாமென பெற்றோர் எம்மிடம் வேண்டிக் கொண்டனர். அரசாங்கம் அதற்கு செவிசாய்த்து சுகாதாரஇ பாதுகாப்புஇ போக்குவரத்துஇ கல்வி அமைச்சுஇ உள்ளூராட்சி மன்றங்கள் என சகலரினது ஒத்துழைப்புடன் ஒரே இலக்குடன் செயற்பட்டு எம்முன் இருந்த சவாலை வெற்றி கொள்ள முடிந்தது.
உயர் தர பரீட்சையினையும் நாளைய திகதி தொடக்கம் அதாவது 2020ஃ10ஃ12 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரையில் நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே எந்தவிதமான சந்தேகத்தினையும் கொள்ளாமல் பிள்ளைகளை பரீட்சைக்காக அனுப்பி வையுங்கள். அத்துடன் நாம் பின்வரும் தரப்பினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சுகாதார அமைச்சர்இ சுகாதாரத் துறையை சார்ந்த சகல தரப்பினர்இ கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட சகல பணியாட்டொகுதியினர்இ அனைத்து உள்ளூராட்சி மன்றங்கள்இ பரீட்சை ஆணையாளர் நாயகம் உட்பட சகல பணியாட்டொகுதியினர்இ அனைத்து பாதுகாப்பு பிரிவினர் என யாவரும் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பில் நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.