யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு மற்றும் புதுடில்லி வலய அலுவலகம் என்பன கூட்டாக ஜப்பான் அரசின் முழுமையான நிதி அனுசரணையுடன் இந்நாட்டின் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள் ஆகிய தரப்பினரை தொடர்புபடுத்தியதாக கற்றல் செயற்பாட்டில் பச்சாதாபம் (Learning for empathy) எனும் பெயரிலான வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ள அதேவேளை அந்த வேலைத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் இன்று (25) கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொல, ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியாமா கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் கலாநிதி பீ.என். மீகஹவத்த, கல்வி மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் கலாநிதி உபாலி சேதர ஆகியோர் மற்றும் பாடசாலை தரப்பினரை பிரதிநிதித்துவம் செய்து நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் என பலர் இந்நிகழ்வில் பங்குபற்றி இருந்தனர்.
பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட பங்களாதேஷ், இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சார்ந்த கல்வியியலார்கள் ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்தும் மேற்படி வேலைத்திட்டத்தின் முன்னணி குறிக்கோளாக அமைவது நிலைபேறான கல்விக் குறிக்கோள்களை அடைவதற்காக பாடசாலை கட்டமைப்பில் பச்சாதாப குணாம்சங்களை செயற்பாட்டு ரீதியாக நடைமுறைப்படுத்துவதாகும்.

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020
/
Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்