இந்திய திறந்த கராத்தே மற்றும் ஜிக்கொண்டோ போட்டடித்தொடரில் இலங்கைக்கு ஆறு பதக்கங்களை கொண்டு வருவதற்கு பரகொட ஸ்ரீ குணரத்;ன கனிஷ்ட கல்லூரியின் நான்கு மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள். அவர்களின் விளையாட்டுத்; திறமைகளை மேலும் மேம்படுத்துவதுடன்இ கல்வி பயிலுவதற்கு விளையாட்டு பாடசாலை ஒன்றை அணுகுவதற்கு சந்தர்ப்பங்கள் கிட்டவில்லை.
அந்த மாணவர்களின் விளையாட்டுத் திறமையை ஊக்குவிப்பதற்குரிய வாய்ப்புகளை வழங்குவதற்காக கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ.எல்;. பீரிஸ் அவர்கள் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்; விவகார அலுவல்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (20) கல்வி அமைச்சில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன் போது அந்த நான்கு சிறார்களும் பட்டேமுல்ல தேசிய பாடசாலைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டதோடு அதன் அதிபர் ஏ.டப்ளியூ.டப்ளியூ கருணாசிங்க அவர்கள்இ காலி மாவட்ட விளையாட்டு பாடசாலையான காலி மஹிந்த கல்லூரியின் அதிபர் காமிணி ஜயவர்தன அவர்களுடன் கலந்துரையாடி சிறார்களின் எதிர்காலத்தை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது.
இதன்போது விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவிக்கும் போதுஇ எதிர்காலத்தில் விளையாட்டு திறன்களுக்கு முன்னுரிமை வழங்கி விளையாட்டுத்துறைக்கான பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறினார்
06 வயது முதல் 19 வயது வரையில் ஒரு விளையாட்டு வீரரை உருவாக்குவதற்கு உறுதுணையாக நிற்பது பாடசாலை ஒன்றே எனவூம்இ மாணவர்களின் விளையாட்டுத் திறமையை இனங்கண்டு அவற்றை விருத்த்p செய்யூம் பொறுப்பு பாடசாலையிடம் ஒப்படைக்கப்படும் என்பதோடுஇ விசேடமாக இந்நாட்டு விளையாட்டுத்துறைப் பாடசாலைகளுக்காக மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது புலமைப்பரிசில் பரீட்சை அல்ல மைதானத்தில் மாணவ சிறார்கள் வெளிக்கொணரும் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் எனவூம் விளையாட்டுத் துறை அமைச்சர் வலியூறுத்தினார்
எதிர்காலத்தில் கல்வி அமைச்சும் விளையாட்டுத்துறை அமைச்சும் ஒன்றிணைந்து வலுவான ஒருங்கிணைப்புடன் செயல் படுவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்
இந்த நிகழ்வில் இந்திய திறந்த கராத்தே போட்டித் தொடரில் பங்குபற்றி வெற்றிபெற்ற தெசிந்து சமரதுங்கஇ ஹிருன் ஜயவர்தனஇ மலித்த மதுஷான்டஇ கேசர புத்திமால் ஆகியோருடன் அவர்களின் பயிற்றுவிப்பாளரான ருவன் நிஸ்ஸங்க அவர்களும் கலந்து கொண்டார்கள். கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராஇ பாடசாலை விவகார மேலதிக செயலாளர் எல்.எம்.டி. தர்மசேனஇ தேசிய பாடசாலை பணிப்பாளர் கே.எல்.ஜே. கித்சிரிஇ விளையாட்டுத்துறை பணிப்பாளர் தயா பண்டாரஇ உதவிக் கல்விப் பணிப்பாளர் இஷானி வெத்தசிங்க ஆகியோரும் சமூகமளித்திருந்தார்கள்
Thursday, 20 August 2020
/
Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்