மேன்மைதங்கிய ஜனாதிபதி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டது யாதெனில், நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பினை தமது அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்காக அவர்களது பொறுப்புகளை நிறைவேற்றுதல் வேண்டுமெனவும் ஆகும். அதற்கிணங்க மக்கள் தமது பொறுப்புகளை ஆகக்கூடிய மட்டத்தில் நிறைவேற்றியுள்ளதால் நாம் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றுதல் வேண்டுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.
புதிய அரசாங்கத்தின் கல்வி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சராக இன்று (13) கல்வி அமைச்சில் தமது பதவியில் கடமைகளை பொறுப்பேற்கையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சமய வழிபாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெருமவும் இணைந்துக் கொண்டார். கல்விச் செயலாளர் என்.எச்.எம்.சித்ராநந்த, இராஜாங்க செயலாளர் திரு.ரஞ்சித் சந்ரசேகர மற்றும் மேலதிக செயலாளார்கள் உள்ளிட்ட பல சிரேட்ட அலுவலர்கள் இந் நிகழ்வில் கலந்தகொண்டனர்.
எமது கல்வி முறையில் இற்றைக்கும் பிள்ளைகளின் அறிவினை, பகுப்பாய்வு வலிமையினை கையள்வதற்குப் பதிலாக மனப்பாடம் செய்யும் முறையை பின்பற்றி அளவிடப்படுவதால், பெற்றுக்கொண்ட அறிவு மற்றும் நடைமுறை பயன்பாடு என்பவற்றுக்கிடையில் பாரிய இடைவெளி உள்ளதாகவும், இந்த முறை மாற்றி அமைக்கப்படுதல் வேண்டுமெனவும் அவ்வாறு மேற்கொள்வதற்கு பாரம்பரிய கட்டமைப்பிலிருந்து மீளுதல் வேண்டுமெனவும் அமைச்சர் இதன்போது தொpவித்தர்.
இந்த நாட்டு கல்வி முறையின் எதிர்காலம் அமைய வேண்டிய முறை தொடர்பாக வலுவான நிகழ்ச்சித் திட்டம் மற்றும் அதற்கான அடிப்படையை தயாரிப்பதற்கு முன்னாள் கல்வி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் திரு.டலஸ் அலஹப்பெரும மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு தமது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
கல்வியைக் கொண்டு எவரொருவானின் வாழக்கைக்கும் ஆகக் குறைந்த மட்டத்திலேனும் பெறுமதி சேர்க்கப்படாவிடின் அதனால் ஏற்படும் பாரிய விளைவுகளை சமூகம் எதிர்நோக்க வேண்டுமெனவும், விசேடமாக போதியளவு உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை போன்ற வெளியக விடயங்கள் காரணமாக உயர் கல்வி வாய்ப்புகள் கிடைக்காத பெரும்பாலான பிள்ளைகளின் எதிர்காலம் பொருட்டு மாற்று வழிகளை அறிமுகப்படுத்தும் பொறுப்பு உள்ளதாகவ[ம் சுட்டிக்காட்டிய அமைச்சர் படிப்படியாக முறையான திட்டத்தின்படி மிகவும் செய்முறை ரீதியாகன காலோசிதமான தீர்மானங்களை இந்த நாட்டின் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்துவதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். ஆசிரியர் தொழில் தமக்கு புதிதல்ல எனவும், அவர்களின் பலம், ஆக்கத்திறன் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பாக 26 ஆண்டுகளுக்கு அதிகமான காலப்பகுதியிலான அனுபவம் தமக்கு உள்ளதாகவும், பல்கலைக்கழக விரிவுரையாளராக தொழில் வாழ்க்கையில் பிரவேசித்து, துணைவேந்தராக சேலையாற்றி அதன் பின்னர் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்ட தமக்கு, இந்த நாட்டில் கல்வி வளர்ச்சியினை அபிவிருத்தி செய்வதன் பொருட்டு அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு மற்றும் ஆக்கப்படைப்பின் பங்களிப்பு என்பவற்றை எதிர்பார்ப்பதாகவும் மேலும் தொரிவித்தார்.