கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டடிருந்த அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தனியார் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, பாடசாலை மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 200 ஐ விட அதிகமாக காணப்படினும், சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மாணவர்களிடையே இடைவெளியைப் பேண முடியுமாயின் அதேபோல், போதிய வகுப்பறை வசதிகளும், ஆசிரியர்களின் எண்ணிக்கையும் காணப்படின் சகல வகுப்புகளுக்குமாக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு, மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரிவெனாக்களின் பிரதானிகள் மற்றும் அதிபர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன