
பிரிவெனா ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வது தொடர்பாக சனாதிபதி தேர்தல் சமயத்தில் வழங்கப்பட்ட அனைத்து ஆசிரியர் நியமனங்கள் நிதி அமைச்சின் கட்டளைப்படி இடைநிறுத்தப்பட்டதுடன், அண்மையில் நடைபெற்ற 184 ஆவது பிரிவெனா கல்விக்குழு கூட்டத்தின் போது பிரிவெனா ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான ஆசிரிய முன்மொழிவினை அனுமதித்திருந்த போதிலும் நிதி அமைச்சின் கட்டளைக்கு அமைவாக அந்நியமனங்கள் வழங்க இயலாமல் இருந்தன.
எவ்வாறாயினும், இந்நாட்டு பிரிவெனாக் கல்வியை மேம்படுத்துவதற்காக பிரிவெனா ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவது காலத்தின் தேவை என இனங்கண்டு, கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் இது குறித்து அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் விளைவாக எதிர்வரும் காலங்களில் மிக விரைவாக இந்த ஆசிரிய முன்மொழிவுக்குரிய நியமனங்களை வழங்கும்படி நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.