இரு மொழிளில் கற்பிக்காத ஆசிரியர்களை ஆசிரியர் நிலையங்கள் ஊடாக இரு மொழிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களாகப் பயிற்றுவிக்கும் வேலைத் திட்டம் (Training of Monolingual Subject Teachers as Bilingual Teachers through Teacher Centers)

 

ஆறாம் தரத்திலிருந்து நடைமுறைப் படுத்தப்படும் இரு மொழிக் கல்வி வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடங்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் கற்பிக்கும் போது அது தொடர்பில் தேவையான வாண்மை நிறைந்த பயிற்றப்ட்ட ஆசிரியர்கள் இல்லாதிருப்பது பெரிய குறைபாடாகும். இந்த குறைபாட்டைத் தீர்க்கும் முகமாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளூடாகக் கற்பிக்கும் குறிப்பிட்ட பாட ஆசிரியர்களை இரு மொழி ஆசிரியர்களாகப் பயிற்றுவிக்கும் வேலைத் திட்டம் 2009 ம் ஆண்டு கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி நிர்வாகக் கிளையுடன் இணைந்து திட்டமிடப்பட்டது.

 

இதனால் இரு மொழி ஆசிரியர்களாகப் பயிற்சி பெற விரும்பும் பாட ஆசிரியர்கள் வலய மட்டத்தில் ஆசிரிய நிலைங்கள் ஊடாகப் பயிற்றப்பட்டனர். இதில் முதல் கட்டமாக வேலைத்திட்டம் 21 ஆசிரிய நிலையங்களில் 2009 ம் ஆண்டு இடம்பெற்றது. இங்கு பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்கள் இரு மொழி ஆசிரியர்களாகப் பயிற்றுவிக்கப் படுகிறார்கள். (இணைப்பு 1)

 

ஒரு வேலைத் திட்டமானது ஒவ்வொன்றும் இரண்டு நாட்களைக் கொண்டதான பன்னிரண்டு செயலமர்வுகளைக் கொண்டு நிறைவடையும். ஒவ்வொரு செயலமர்வும் கீழ்க் குறிப்பிட்டவாறு நான்கு பகுதிகளுடன் நிறைவு பெறும்.

 

  1.    இரு மொழிக் கல்வி அடிப்படைகள் மற்றும் விடய அடிப்படை ஆய்வுகள்,
  2. இரு மொழி ஆசிரியர்களாய் அறிவியல் பாடம் கற்றல்-கற்பித்தல் செயல்முறைகள்,
  3. ஆங்கில மொழி வாண்மையை மேம்படுத்தல்,
  4. சமாதானக் கல்வி.

 

2010 ம் ஆண்டில் 55 ஆசிரிய நிலையங்கள் ஊடாக இந்த வேலைத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. அதன்போது அறிவியல் அல்லது கணித பாடத்தை சிங்களம் அல்லது தமிழ் மொழி ஊடாகக் கற்பிக்கும் ஆசிரியர்களை இரு மொழி ஆசிரியர்களாகப் பயிற்றுவிப்பதை அடிப்படையாகக் கொண்டு வேலைத் திட்டம் இடம் பெற்றது. (இணப்பு 2)

 

2011 ம் ஆண்டில் 57 ஆசிரிய நிலையங்கள் ஊடாக இந்த வேலைத் திட்டத்தினை நடைமுறைப் படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதன் போது இதற்கு முன்பு இடம் பெற்ற வேலைத் திட்டங்களில் நிறைவு பெறாது போன செயலமர்வுகளை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய இரண்டு பாடங்களுக்குமான புதிய ஆசிரியர்களுக்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. (இணைப்பு 3)