கல்வி அமைச்சரின் செய்தி

 

தாய் நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக நல்ல கடமைப் பொறுப்புகள் கல்வி அமைச்சின் மீது சுமத்தப்பட்டுள்ளன.
தாய் நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக நல்ல கடமைப் பொறுப்புகள் கல்வி அமைச்சின் மீது சுமத்தப்பட்டுள்ளன. அலுவலர்கள், அதிபர்கள், சிரியர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றார்கள் ஆகியோர்களால் கல்வி முறைமையில் செயற்படுத்தப்படும் மற்றும் கல்வி முறைமையினால் பயன்பெறும் பெருமளவானோருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி அமைச்சின் நல்லாட்சி செயற்பாடுகளின் மூலம் அதனை சிறந்த நிறுவனமாக ஆக்கும் நோக்கத்தை அடையும் வண்ணம் கல்விக்காக வரவுசெலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பெறப்படும் நிதியை படிப்படியாக உயர்த்துவதன் மூலம் பொதுக் கல்வியை தரமானதாக அபிவிருத்தி செய்வது அவசரமான முக்கியத்துவம் மிக்க பிரதான செயலாகும்.
அவ்வாறே இனம், சமயம், குல பேதங்கள் இல்லாமல் பற்றுள்ள இலங்கையர்களாக தாய் நாட்டுக்கு பங்களிப்பு செய்வதற்காக உயர் மட்டத்தில் முகாமைத்துவம் செய்யத் தக்காக பௌதிக மற்றும் மானிடவளங்களினால் சிற்த பாடசாலை முறைமை யொன்றை தாய்ட்டு பிள்ளைகளுக்கு அன்பளிப்பு செய்வதன் ஊடாக “வாழ்விடத்துக்கு அருகில் உள்ள பாடசாலை மிக நல்ல பாடசாலை” என ஆக்குவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதன் மூலம் நகரப்புற பாடசாலைகளில் காணப்படும் போட்டிச் சூழலை குறைக்கவும், சிறந்த கற்றல் வாய்ப்பை வழங்கவும் சகலருக்கும் சம வாய்ப்பு கிட்டச் செய்வதன் மூலம் தாய் நாட்டின் எதிர்காலம் சௌபாக்கியமாகக் கூடிய நிபுணத்துவம் மிகுந்த நல்ல மானிட வளத்தை வழங்கவும் கூடியதாக இருக்கும்.
கல்வி அமைச்சின் கடமைப் பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகள் போன்று சேவைகள் தொடர்பாகவும் தேவையான தகவல்களும் உண்ணாட்டு மற்றும் பன்னாடு மக்களுக்கு வழங்குதலும் கல்வி அமைச்சின் இணைய தளத்தில் முதன்மையான பணியாகும். அத்துடன் புதிய யோசனைகள், கருத்துகள் மற்றும் பதில் மூலம் அந்த சேவையை மிகவும் அர்த்தம் நிறைந்தாக வழங்குவதற்காக இந்த இணையத் தளம் பரிசீலனை செய்யும் உண்ணாட்டு மற்றும் வெளிநாட்டு மக்கள் அதற்கு ஒத்துழைப்பு தருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

 

கௌரவ அகில விராஜ் காரியவசம் (பா.உ.)
கல்வி அமைச்சர்