moe.gov.lk

“ எதிர்கால தொழில் வாய்ப்பு மற்றும் பன்னாட்டு அனுபவத்தைப் பெற்று அக்கறை கொண்டவராக நாட்டின் கல்வி முறைமையில் தேவையான மாற்றங்களைச் செய்வோம்”

grd1முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்க்கும் தேசிய விழாவில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் உரை.

2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேரும் பிள்ளைகள் தமது 13 ஆண்டுகால பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து, 2030 ம் ஆண்டில் பாடசாலையை விட்டு நீங்கும் போது அவர்களுக்காக மேலெழும் உயர் கல்வி வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பு இன்றுள்ளதைவிட மிக அதிகமாக வேறுபட்டிருக்கும் என்றும், அந்த நிலைமைப் பற்றி விசேட கவனத்தைச் செலுத்தி, ஆய்வுப் பரிசோதனை செய்து பார்ப்பதுடன் நாட்டின் கல்வி முறைமையில் தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்வோம் என்றும் க்கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளில் முதலாம் தரத்தில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் உத்தியோக பூர்வ நிகழ்ச்சியைக் குறிக்கும் கொழும்பு இசிபத்தன வித்தியாலயத்தில் இன்று (15) காலை இடம் பெற்ற தேசிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

grd5 grd4

அறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகமத்தைக் கட்டியெழுப்புவதற்காக தற்போது கல்விப் புலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விசேட செயற்பாடுகள் தொடர்பாகவும், இதன் போது அமைச்சர் குறிப்பிட்டார். எதிர் காலத்தில் எந்தவொரு பிள்ளைக்கும் சாதாரண தரத்துடன் பாடசாலைக் கல்வியைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படமாட்டாது என்றும், கல்வி அமைச்சரின் தலைமையில் நடைமுறைக்கு வந்துள்ள 13 ஆண்டு சான்றுபடுத்தப்பட்ட கல்வி வேலைத் திட்டத்தின் கீழ் பிள்ளைகளின் திறமைக்கு ஏற்ப பாடங்களைத் தெரிவு செய்து உயர் கல்வி வரத்தினைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றும் அமைச்சர் கூறுனார்.

grd2 grd3

உயர் தர வகுப்புகளுக்குப் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழில் பாடங்களின் கீழ் பயன்பாட்டு மற்றும் நவீன தொழில் உலகத்துக்குப் பொருத்தமான புதிய 26 பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த வேலைத் திட்டத்திd; ஒழுங்கு முறைக் கட்டத்தை செயற்படுத்துவதற்கு ஆசிரியர்களை சேர்த்தலும்  பயிற்றுவித்தலும் தற்போது இடம் பெற்று வருகின்றது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அவ்வாறே ஆரப்ப தரங்களின் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியை மேம்படுத்தவும், விசேடமாக கிராமப்புற பாடசாலைகளில் பிள்ளைகள் அடிப்படை ஆங்கில மொழித் தகைமையை உயர்த்தவும் 1 மற்றும் 2 ம் தரங்களுக்கு  பாடநூல்’கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

புதிதாக பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்கும் சிறு பிள்ளைகளின் உளவியல் அபிவிருத்தியைப் பற்றி கவனம் செலுத்தி இங்கு சரியான கல்வியை பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாக ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு விசேட பொறுபு உண்டு என்றும், வலியுறுத்தமிய அமைச்சர், இந்த ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேரும் 340,000 க்கு அதிகமான சகல மாணவப் பிள்ளைகளுக்கும் வெற்றிகரமான எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்றும் நல்லாசி வழங்கினார். 

 

எதிர்கால தொழில் வாய்ப்பு மற்றும் பன்னாட்டு அனுபவத்தைப் பெற்று அக்கறை கொண்டவராக நாட்டின் கல்வி முறைமையில் தேவையான மாற்றங்களைச் செய்வோம்”

 

முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்க்கும் தேசிய விழாவில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் உரை.

 

2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேரும் பிள்ளைகள் தமது 13 ஆண்டுகால பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து, 2030 ம் ஆண்டில் பாடசாலையை விட்டு நீங்கும் போது அவர்களுக்காக மேலெழும் உயர் கல்வி வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பு இன்றுள்ளதைவிட மிக அதிகமாக வேறுபட்டிருக்கும் என்றும், அந்த நிலைமைப் பற்றி விசேட கவனத்தைச் செலுத்தி, ஆய்வுப் பரிசோதனை செய்து பார்ப்பதுடன் நாட்டின் கல்வி முறைமையில் தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்வோம் என்றும் க்கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

 

 

பாடசாலைகளில் முதலாம் தரத்தில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் உத்தியோக பூர்வ நிகழ்ச்சியைக் குறிக்கும் கொழும்பு இசிபத்தன வித்தியாலயத்தில் இன்று (15) காலை இடம் பெற்ற தேசிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

 

அறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகமத்தைக் கட்டியெழுப்புவதற்காக தற்போது கல்விப் புலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விசேட செயற்பாடுகள் தொடர்பாகவும், இதன் போது அமைச்சர் குறிப்பிட்டார். எதிர் காலத்தில் எந்தவொரு பிள்ளைக்கும் சாதாரண தரத்துடன் பாடசாலைக் கல்வியைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படமாட்டாது என்றும், கல்வி அமைச்சரின் தலைமையில் நடைமுறைக்கு வந்துள்ள 13 ஆண்டு சான்றுபடுத்தப்பட்ட கல்வி வேலைத் திட்டத்தின் கீழ் பிள்ளைகளின் திறமைக்கு ஏற்ப பாடங்களைத் தெரிவு செய்து உயர் கல்வி வரத்தினைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றும் அமைச்சர் கூறுனார்.

 

உயர் தர வகுப்புகளுக்குப் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழில் பாடங்களின் கீழ் பயன்பாட்டு மற்றும் நவீன தொழில் உலகத்துக்குப் பொருத்தமான புதிய 26 பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த வேலைத் திட்டத்திd; ஒழுங்கு முறைக் கட்டத்தை செயற்படுத்துவதற்கு ஆசிரியர்களை சேர்த்தலும்  பயிற்றுவித்தலும் தற்போது இடம் பெற்று வருகின்றது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

அவ்வாறே ஆரப்ப தரங்களின் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியை மேம்படுத்தவும், விசேடமாக கிராமப்புற பாடசாலைகளில் பிள்ளைகள் அடிப்படை ஆங்கில மொழித் தகைமையை உயர்த்தவும் 1 மற்றும் 2 ம் தரங்களுக்கு  பாடநூல்’கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

புதிதாக பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்கும் சிறு பிள்ளைகளின் உளவியல் அபிவிருத்தியைப் பற்றி கவனம் செலுத்தி இங்கு சரியான கல்வியை பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாக ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு விசேட பொறுபு உண்டு என்றும், வலியுறுத்தமிய அமைச்சர், இந்த ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேரும் 340,000 க்கு அதிகமான சகல மாணவப் பிள்ளைகளுக்கும் வெற்றிகரமான எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்றும் நல்லாசி வழங்கினார்.https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.