moe.gov.lk

‘புதிதாக அச்சிடப்பட்ட பாடநுல்களை இரண்டு ஆண்டுகாலம் பயன்படுத்துவதற்கு மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு எடுத்த தீர்மானம் நல்ல எண்ணத்துடன் எடுத்த தீர்மானமாகும் – கல்வி அமைச்சர் கூறுகிறார்.

ds1“சாதாரண தரப் பரீட்சையின் சகல ஏற்பாடுகளையும் திசெம்பர் மாதத்திலேயே நிறைவு செய்வமற்கு வருங் காலத்தில் நடவடிக்கை – விடைத்தாள் திருத்துநர்களின் கொடுப்பனவை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.
அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு இலவசமாகத் தரப்படும் பாடநூல்களை குறைந்த்து இரண்டு ஆண்டுகளுக்காவது பயன்படுத்துவதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கு எடுத்த தீர்மானம் நல்லெண்ணத்துடன் எடுத்த தீர்மானம் என்று கல்வி அமைச்சர் கூறினார் இன்று (11) கொழும்பு டீ. எஸ். சேனானாயக்கா வித்தியாலயத்தில் இடம் பெற்ற 2018 ம் ஆண்டுக்கான பாடநூல் பகிர்தளிக்கும் தேசியபெருவிழாவில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ds2இலவ கல்வியை வெட்டி மாணவர்களுக்கு பாடநூல்களை விற்பதற்கும் பாடநூகளை வழங்காது இருப்பதற்கும் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கின்றது என்று பல்வேறு தரப்பினரால் கட்த சில நாட்களாக எழுப்பப்பட்ட மிக மோசமான அரசியல் குற்றச்சாட்டை முற்றாக மறுதலிப்பதாகவும், பாடநூல்கள் அச்சிடுவதற்கு பொது மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டு செய்யப்படும் அதிக செலவை குறைத்து அந்த மிகுதிப் பணத்தை வேறு விடயங்களுக்கு பயன்படுத்த முடியும் என்ற நிதி முகாமைத்துவ நோகத்தோடும் மாணவர்களுக்கு பாடநூல்களின் மதிப்பைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்’டும் என்ற நோக்கத்தோடும் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் இங்கு விளக்கம் அளித்தார்.

அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் பாடநூல்களை மேலுமொரு ஆண்டு ஏற்றவாறு பாதுகாக்கும் கடமை மற்றும் பொறுப்பு மாணவர்களுக்கு உரியது என்றும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார். ஒரு ஆண்டில் பயன்படுத்தப்படும் பாடநூலை மீண்டும் பயன்படுத்துவது தொடர்பில் காணப்படும் விருப்பமின்மை காரணமாக சில மாணவர்களைப் போன்று பல பெற்றோரும் கல்வி அமைச்சில் விலைக்குப் பெற்றுக் கொள்ளும் மையங்கள் ஊடாக புதிய பாடநூல்களை விலைக்கு பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். அந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் பாடநூல்களை விற்பதற்கும் இலவச கல்வியை வெட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்கின்றது என்று பலவேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார்கள் என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இங்கு விளக்கம் அளித்தார்.
ds3அவ்வாறே, சாதாரண தரப் பரீட்சைக்காக எடுக்கும் காலத்தைக் குறைப்பதற்கும், சாதாரண தரப் பரீட்சை நடவடிக்கைகள் காரணமாக புதிய ஆண்டில் ஆரம்பமாகும் கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தவர்ப்பதற்கும் எதிர்காலத்தில் சாதாரண தரப் பரீட்சைக் குரிய பரீட்சைக் கடமைகளை திசெம்பர் மாதத்திலேயே நறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். எதிர் காலத்தில் விடைத்தாள் திருத்துபவர்களின் கொடுபனவை அதிகரிப்பதற்கும் விடைத்தாள் திருத்தும் போது மாணவர்களுக்கு யாதேனும் பாதிப்பான நிலைமை ஏற்படுமானால், அவற்றைத் தவிர்க்கும் நோக்கத்துடன் சகல விடைத்தாள் திருத்துநர்களுக்கும் ஒரு நாளில் திருத்தக் கூடிய குறித்த விடைத்தாள்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்’கு மேலும் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் செயலாளர் திரு சுனில் ஹெட்டியாராச்சி, கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் திரு ஐ. எம். கே. பீ. இலங்கசிங்க மற்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் திரு சனத் பூஜித உட்பட அலுவலர்களும் பாடசாலை பலவற்றினை பிரதிநிதித்துவம் செய்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.