moe.gov.lk

விசேட திறமை கொண்ட பிள்ளைகளை ஊக்குவிப்பதற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நற் புலமைப்பரிசில் வேலைத் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

schoகல்வி அமைச்சர் கௌரவ அகி விராஜ் காரியவசம் அவர்களின் கருத்துக்கு அமைய, 2017 ம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட யோசனையின் கீழ் விழைளயாட்டு, கலை மற்றும் ஆக்கத்துறைகளில் விசேட திறமை காட்டும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக கல்வி அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நற் புலமைப்பரிசில் வேலைத் திட்டத்துக்கு விண்ணப்பங்களை கோரும் செயற்பாடு நேற்று ஆரம்பமாகியது. எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளத் கூடிய முக்கியமானவற்றில் திறமை கொண்ட ஆக்கத் பிள்ளைகள் பரம்பரையை உருவாக்குதற்கான செயற்பாட்டில் நுழைந்துள்ள இந்த புலமைப் பரிசில் வேலைத் திட்டத்தின் மூலம் கெட்டிக்கார மாணவர்களின் விசேட திறமைகனை அபிவிருத்தி செய்தலும், நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பை வழங்கும் வண்ணம் அத்தகைய விசேட திறன்களை மேலும் வளர்ப்பதற்கும் ஊக்கவித்தல் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புலமைப் பரிசில் புது ஆக்கங்கள், அழகியற் செயற்பாடுகள் மற்றும் விளையாட்டு போன்ற 3 விசேட பிரிவுகளின் கீழ் வழங்குவது நோக்கமாகும்.

2017 ம் ஆண்டு முதல் இரண்டாம் நிலைக் கல்விப் புலத்தில் விசேட திறமை காட்சிப்படுத்திய மற்றும் குறித்த ஆண்டில் 12 ம் தரத்தில் சேர்ந்து உயர்தர வகுப்புக் கல்வியை ஆரம்பித்த மாணவர்களிடையே தெரிவு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு 20 மாத காலப் பகுதியில் ங்களுக்கு ரூபா 50,000/= பெறுமதி கொண்ட புலமைப் பரிசிலுக்கு ஈடான 20 மாதாந்த தவணையில் கொடைமுனைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் மேலதிக தகவல்களை கல்வி அமைச்சின் இணைய தளத்தில் (www.moe.gov.lk ) பெற்றுக்கொள்ள முடியும்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.