moe.gov.lk

தகவல் தொழினுட்ப முதன்மைத் திட்டமொன்றைத் தயாரித்தல் வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

youthகல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனையின் படி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பத்தினை கருத்தில் கொண்டு நிறுவப்பட்டு இருக்கும் யுனெஸ்கோ ஒத்துழைப்பு குழுவின் தலைமையில் நடைபெற்றுவரும் இரண்டாவது செயலமர்வை 2017 ஜீலை மாதம் 17 ம் திகதி முதல் 20 ம் திகதி வரை வௌளவத்தை மிராஜ் ஹோட்டலில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுளன. அதன் ஆரம்ப நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் திரு சுனில் ஹெட்டியாராச்சி தலைமையில் 17 ம் திகதி முற்பகல் 9. 00 மணிக்கு நடைபெற்றது.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பத்தின் முதன்மைத் திட்டம் ஒன்றை தயாரித்தல் யுனெஸ்கோ குழுவின் தலைவர் ஜொங்க்வி பார்க் (Jonghwi Park) அவர்கள் உள்ளிட்ட குழு பிரதான ஏற்புக் குழுவை பிரதிநிதித்துவப் படுத்தி கல்வி அமைச்சின்’ மனித வள அபிவிருத்தி ஆணையாளர் பேராசிரியர் குணபால நாணயக்காரா, பிரதம ஆணையாளர் (ஆசிரியர் கல்வி) திரு கே. எம். எம். பண்டார, கல்வி அமைச்சின் சிரேஷ்ட வட்டார அலுவலர்கள், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மையின் பிரதிநிதிகள் மற்றும் சகல குழுக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தி பல்கலைக் கழக, அரச மற்றும் தனியார் நிவனங்கள் மட்டத்தில் கடமை புரியும் அலுவலர்கள், அதிபர்கள் மற்றும் தகவல் தொழினுட்ப ஆசிரியர்களைப் பிரதிதித்துவப் படுத்திய குழுவும் இதன் பொருட்டு கலந்துகொண்டனர்.

தகவல் தொடர்பாடல் தொழினுட்ப முதன்மைத் திட்டத்தை தயாரித்தலுக்கு அமைய அடிப்படைத் தகவல்கள் கலந்துரையாடலை கருத்தில் எடுத்து குழுச் செயற்பாடுகள், ஏனைய நாடுகளின் அறிவு மற்றும் பட்டறிவை பரிமாறிக் கொள்ளல் முதலான செயற்பாடுகள் பல இந்த நான்கு நாட்களும் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அதனூடாக அடிப்படைத் தரவுகள் மற்றும் தகவல்களை ஒன்றிணைத்தல் இந்த நான்கு நாட்கள் வேலைத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாக அறிந்து கொள்ள முடியும்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.