moe.gov.lk

இடர் நிலைமை தொடர்பில் கலந்துரையாடும் விசேட ஊடக சந்திப்பு.

akநிகழ்ந்துள்ள இடர் நிலைமை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் இன்று (31) முற்பகல் கல்வி அமைச்சில் விசேட ஊடக சந்திப்பு இடம் பெற்றது.

இடர் முகாமைத்துவ மையம் வழங்கியுள்ள தகவல் அறிக்கைக்கு அமைய, வெள்ளத்தில் மூழ்கி இதுவரை பாடசாலை மாணவர்கள் 44 பேர் மரணமடைந்துள்ளனர். 08 பேர் காணாமல் போயுள்ளனர். வௌளத்தால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான இரத்தினபுரி மாவட்டத்தில் 57 பாடசாலைகளும். கேகாலை மாவட்டத்தில் 02 பாடசாலைகளும், காலி மாவட்டதில் 08 பாடசாலைகளும், மாத்தறை மாவட்டத்தில் 04 பாடசாலைகளும். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 05 பாடசாலைகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மேல் மாகாணத்தில் ஜயவர்தனபுர வலயத்தில் 04 பாடசாலைகளும், மத்துகமை வலயத்தில் 15 பாடசாலைகளும், ஹொரணை வலயத்தில் 39 பாடாலைகளும், ஹோமாகமை வலயத்தில் 04 பாபடசாலைகளும் சேதமடைந்துள்ளன.

அவ்வாறே, சபரகமுவை மாகாணத்தில் 30 பாடசாலைகளும், தெற்கு மாகாணத்தில் 12 பாடசாலைகளும் மற்றும் மேற்கு மாகாணத்தில் 17 பாடசாலைகளும் அதகி முகாம்களாக இயங்கி வருகின்றன.

வெள்ளத்தால் இடருக்கு உள்ளான 08 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஜூன் 02 ம் திகதி வெள்ளிக்கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை மேலும் நீடித்தல் அல்லது நிகழும் தன்மைக்கு அமைய நீடிக்க வேண்டிய பாடசாலைகள் சம்பந்தமாக வெள்ளிக்கிழமையளவில் அறிக்கப்படும் என்று இதன் போது அமைச்சர் குறிப்பிட்டார். வெள்ளத்தால் இடருக்கு உள்ளான பாடசாலை மாணவருக்கு இலவசமாக 03 பொதி சீருடைகளும், பாடநுல்கள் பொதியும், காலணி ஒருசோடியும் மற்றும் பயிற்சிப் புத்தகங்களும் அரசாங்கத்தால் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அவ்வாறே, மீண்டும் பாடசாலை ஆரம்பமாகிய பின்னர் இடர் நிலைமைக்கு உள்ளாகிய பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது சீருடை அணிந்து வருவது கட்டாயமில்லை என்றும், பாடசாலை சீருடைக்குப் பதிலாக தம்மிடம் இருக்கும் வேறு உடையையோட பாடசாலைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படுகினறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், வெள்ளம் காரணமாக அழிந்து போன பரீட்சைச் சான்றிதழ்களை பரீட்சைத் திணைக்களத்தில் மீண்டும் இலவசமாகப் வழங்குவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தில் முழுமையாக 190 நாட்கள் பாடசாலை நடாத்தப்படல் வேண்டும். இந்த அனர்த்தம் காரணமாக சில பாடசாலைகள் மூடப்படும் நிலைமை ஏற்படுவதால், மாணவர்கள் இழக்கும் பாடசாலை நாட்களை ஈடு செய்வதற்கு சனிக்கிழமைகளில் பாடசாலை நடாத்தல் அல்லது நாளாந்த பாடசாலை வேளையை நீடித்தல் என்பவற்றுக்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இங்கு கூறினார்.

கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடருதவிக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது வெள்ளத்தால் இடருக்குள்ளான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்மாரின் விண்ணப்பங்களுக்கபு முன்னுரிமை அளிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

ஒவ்வொரு தேசிய பாடசாலையும் இடருக்கு உள்ளான மாணவர்களன் பொருட்டு பணம் தவிர்ந்த ஏனைய உதவிப் பொருட்களை சேகரிக்கும் மையமாக தற்போது இயங்குகின்றன. இந்த இடர் நிலைமை காரணமாக உடைந்து விழுந்த மற்றும் சேதத்துக்கு உள்ளான சகல பாடசாலைகளும் மிக விரைவில் மீளமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், நாடு முழுவதிலும் காணப்படும் பழைய பாதுகாப்பற்ற கட்டிடங்கள் கொண்ட பாடசாலைகள் பற்றிய தகவல்களை திரட்டி அவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கு அமைச்சரவைப் பத்திரம் மூலம் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் மைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சரின் விசேட அறிவுறுத்தலின் பேரில், கல்வி அமைச்சுச் செயலாளரினதும் இராஜாங்க செயலாளரினதும் வழிகாட்டலின் கீழ் இரத்தினபுரி றுவன்புர, கழுத்துறை பஸ்துன்ரட்டை மற்றும் காலி றுகுணு கல்விக் கல்லூரிகள் ஊடாக இந்த பிரதேசங்களில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான சமைத்த உணவு வழங்கும் வேலைத் திட்டம் ஆரம்பமாகியுள்ளது. அதற்குத் தேவையான உணவுப் பொருட்களுடன் பல லொறிகள் அந்த பிரதேசங்களுக்குப் புறப்பட்டுச் செல்வது இன்று (31) காலை கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தலைமையில் ஆரம்பமாகியது. இதன் பொருட்டு பாடநூல் அச்சிடுவோரின் ஒத்துழைப்பு பங்களிப்பு கிடைத்துள்ளது.

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.