moe.gov.lk

இந்தியாவில் உள்ள MBD குழுமத்தில் இருந்து இரண்டு பாடசாலைகளுக்கு டிஜிட்டல் வகுப்பறைகள் அன்பளிப்பு

mbdஇந்தியாவில் MBD உள்ள குழுமம் இலங்கையில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு டிஜிட்டல் தொழில் நுட்ப கருவிகளுடனான இரண்டு வகுப்பறை வசதிகளை அன்பளிப்பு செய்வதற்கு தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. இந்த வகுப்பறைகளை நிறுவுதல் தொடர்பான உத்தியோகபூர்வ வேலைத் திட்டம் சமீபத்தில் (06) கல்வி அமைச்சில் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சி கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள தலைமையில், MBD குழுமத்தின் தலைமை நிறவேற்று அலுவலர் திருமதி மொனிக்கா மல்ஹோத்ரா உள்ளிட்ட இந்திய பேராளறர்களின் பங்குபற்றுதலோடு இடம் பெற்றது.

குருணாக்கல் நாக்கவத்தை தேசிய பாடசாலை மற்றும் கேகாலை கனேதன்னை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இந்த டிஜிட்டல் வகுப்றைகள் நிறுவப்படுவதற்குத் தெரிவு செய்யப்பட்டன. இந்த பாடசாலைகளில் காணப்படும் ஒரு வழமையான வகுப்பறை டிஜிட்டல் வசதிகளைக் நவீன வகுப்பறையாக மாற்றப்படும். அதற்கேற்றவாறு, ஒரு டிஜிட்டல் பலகை, ஒரு கணினி மற்றும் ஏனைய கருவிகள் இந்த பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருக்கின்றன.

இதற்கு மேலதிகமாக பல்வேறு பாடங்களைத் தழுவி இந்த கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர் குழுவொன்றுக்கு பயிற்சி அளிக்கவும் MBD குழும்ம் இணங்கியுள்ளது. இந்த வாரத்துக்குள் இந்த பயிற்சி ஆரம்பமாகும். பயஙிற்றப்பட்ட ஆசிரியர்கள் மூலம் பாடசாலையின் ஏனைய ஆசிரியிர்களைப் பயிற்றுவிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிறுவனத்தின் இலங்கை முகாமையாளராகிய திரு ஜயம்பதி அரம்பேபொல மற்றும் சம்பந்’தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களும் இந்த நிகழ்ச்சியில் இணைந்து கொண்டார்கள்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.