moe.gov.lk

உயர்தர வகுப்பில் கற்கும் மாணவர்களுக்கு டயலொக் நிறுவனத்தின் புலமைப் பரிசில் வழங்கல்

dialog 1தொடர்பாடல், தொழினுட்பக் கல்வி மற்றும் பொறியியல் துறைகளின் அபிவிருத்திக்கு வாய்ப்பு வழங்கும் பொருட்டு ஆக்கத் திறன் கொண்ட மாணவர்கள் மத்தியில் மிகத் திறமையானவர்களைத் தெரிவு செய்து அவர்களின் ஆற்றலை மிகவும் அபிவிருத்தி செய்து நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்யும் நோக்கத்துடன் கல்வி அமைச்சுடன் இணைந்து டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தினால் க. பொ. த. (சாதாரண தரம்) பரீட்சையில் சம்பந்தப்பட்ட பாடங்களில் மிக உயர்ந்த புள்ளிகள் பெற்று பௌதிகவியல் பிரிவில் (கணிதம்) உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது.

dialog 2அதன் படி 30 மாணவ மாணவிகளுக்கு புலமைப் பரிசில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் கைகளால் இன்று 23 ம் திகதி வழங்கப்பட்டது. கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடந்த இந்த விழாவில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு சுனில் ஹெட்டியாராச்சி உட்பட அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.