கணிதப் பிரிவு


திருமதி. பிரியதா நாணயக்கார
கல்வி இயக்குனர்
கணிதம்

கிளையின் பணிகள்

கணிதக் கல்வி மற்றும் அதன் வெளிப்பாடுகளுடன் தொடர்புடைய ஆய்வின் அடிப்படையில் பொருத்தமான கொள்கை முன்மொழிவுகளை சமர்ப்பித்தல் மற்றும் கணிதக் கல்வி தொடர்பான தேசிய கொள்கைகளை வகுப்பதற்கு உதவுதல்.

கணிதக் கல்வியின் பிரதான உபாயங்களை இனங்கண்டு அவற்றை வருடாந்தம் அமுல்படுத்துவதன் ஊடாக குறுங்கால, நீண்ட காலத் திட்டங்களை உருவாக்குதல்.

வலய மற்றும் மாகாண கணித பாடப் பணிப்பாளர்களுடன் ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்ற மீளாய்வுகளை மேற்கொள்ளல் மற்றும் அதன் ஊடாக பாடசாலைகளில் கணித கற்பித்தல், கற்றல் செயன்முறையை விருத்தி செய்தல்.

கணித பாடத்தின் அபிவிருத்திக்காக சுற்றறிக்கைகள், வழிகாட்டல்கள், அறிவுறுத்தல் கையேடுகள் என்பவற்றைத் தயாரித்தல்.

கணித பாடத்துடன் தொடர்புடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பரீட்சைத் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளுதல்.

புதிய உருமாறும் கல்வி நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்ட “பாடத்திட்ட கட்டமைப்பு”, “மதிப்பீட்டு கட்டமைப்பு” மற்றும் “கற்றல் கற்பித்தல் செயல்முறை” ஆகியவற்றுடன் நேரடியாக ஈடுபடுதல்

‘யாவருக்கும் கணிதம்’ கொள்கைக்கு அமைவாக அனைத்து மாணவர்களுக்கும் கணித எழுத்தறிவைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான பின்னணியை உருவாக்குதல் மற்றும் மாற்றுக் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.

புதிய கற்பித்தல் முறைமைகள், அணுகுமுறைகள், எண்ணக்கருக்கள், ஆசிரியர்களுக்கான கட்டியெழுப்பல் மற்றும் அளவீட்டு செயன்முறைகளை அடிப்படையாகக் கொண்ட தொடர்ச்சியான திறன் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல் மற்றும் சேவையில் உள்ள ஆலோசகர்கள் மற்றும் விடயப் பணிப்பாளர்களுக்கான தொழில்சார் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் மாகாண தனிநபர் குழுக்களை நிறுவுதல்.


கணிதத்தின் டிஜிட்டல் கல்வி வாய்ப்புகளை வழங்குதல்.

“கணித கற்றல் காட்சியகங்கள்”, “கணித உபகரணங்கள்” என்பவற்றினூடாக கணித கற்கை சூழலை மேலும் விருத்தி செய்தல்.

கணிதக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சி கலாச்சாரத்தை உருவாக்குதல்.

கணிதப் பாடத்தை பிரபல்யப்படுத்துவதற்காக “பாடசாலை கணித சங்கங்கள்”, “சிறுவர் கணிதவியலாளர்”, “ஆக்கத்திறன் ஆசிரியர்”, “அகில இலங்கை கணிதப் போட்டிகள்” போன்ற துணைப் பாடவிதானமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்..

திறமையான மாணவர்களுக்கு கணித திறன் அபிவிருத்தி வாய்ப்புக்களை வழங்குதல் (தேசிய மற்றும் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகள் மூலம்)