கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பிரிவெனாக்கள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்து டெங்கு அபாய கட்டுப்பாடு தொடர்பான வழிமுறைகளை மேற்கொள்ள கல்வியமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுரைப்பு வழங்கி உள்ளது
பாடசாலை மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் முன்னர், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் உரிய நிறுவனங்களின் துப்புரவு பணியாளர்கள், பாடசாலை தொழிலாளர்கள், பூந்தோட்டத் தொழிலாளர்கள, காவலாளிகள் மற்றும் ஏனைய கல்வி சாராத ஊழியர் குழு உறுப்பினர்களிடம் இதற்கான பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் எனவும் அதற்கு மேலதிகமாக பாடசாலை அபிவிருத்திச் சபை மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அனைத்து மாகாணவலய கல்வி அலுவலர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுரை வழங்கி உள்ளது
அனைத்து துப்புரவு பணிகளையும் கோவிட் 19 வைரசு கட்டுப்பாட்டுக்குரிய அரசினால் வெளியிடப்பட்டுள்ள மற்றும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பகுதியினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகளின் பேரில் மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு கவனத்தில் ஈர்க்கின்றது.