யௌவனப் பருவத்தினரின் சுகாதாரம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று (17) கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது யௌவனப் பருவத்தினரின் சுகாதாரம் குறித்த விசேட சொற்பொழிவை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக விசேடவைத்திய நிபுணர் அசாந்தி பெர்னாண்டோ பலபிட்டிய நிகழ்த்தினார்.
மேலும் உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.
சுகாதாரம் என்பது கல்வியுடன் நேரடியாக தொடர்புடையது என்று நாங்கள் நம்புகிறோம். கல்விக்கும் சுகாதாரத்திற்கும் இடையில் என்ன தொடர்பு உள்ளதென்று சிலர் சிந்திக்கலாம்.
சுகாதாரம் என்பது அனைவருக்கும் உள்ள உரிமை, அனைவருக்கும் அவசியமான ஒன்று என்பதுடன் சரியான சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால், குறிப்பாக வசதிகள் குறைந்த பாடசாலைகளில் உள்ள பெண் பிள்ளைகள் மாதத்திற்கு ஒரு தடவையாவது கல்வியைப் பெறுவதைத் தவறவிடுகிறார்கள் என்பதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேநேரத்தில் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடும் அவர்களுக்கான உரிமையையும் கட்டுப்படுத்தப்படுகிறது. சரியான சுகாதார வசதிகள் இல்லாமையே அதற்கான காரணமாகும்.
மாணவிகளாகிய நீங்கள் மாத்திரமல்ல நாம் அனைவரும் இந்த அனுபவத்தை தேவைக்கு அதிகமாகவே அனுபவித்திருக்கிறோம். பாடசாலைக்குள் மாத்திரமல்ல. பொது வசதிகள் மிகவும் குறைவாக உள்ள காரணத்தினால் சமூகத்திலுள்ள ஒட்டுமொத்த பெண்களும் இந்த சிரமத்திற்கு முகம்கொடுக்கின்றனர்.
சுகாதாரம் என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் கேட்கலாம், ஆண்களாகிய நாங்கள் இங்கு எதனைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், இது பெண்களின் பிரச்சினை அல்லவா, அவர்களே அதைத் தீர்த்துக்கொண்டால் பிரச்சினை முடிந்துவிட்டது தானே என்றும். ஆனால் உங்களுக்கும் சுகாதாரப் பிரச்சினைகள் இருக்கின்றது. அதேவேளை, பெண்கள் ஏதேனும் அசௌகரியத்தை அனுபவித்தால், ஆண்கள் அதைப் பற்றி உணர்திறன் உடையவர்களாக இருப்பதற்கு புரிதலும் பச்சாதாபமும் கொண்டிருக்க வேண்டும்.
வெற்றிகரமான ஒரு பிரஜை என்பதன் அர்த்தம் சிறந்த ஒரு தொழிலைச் செய்வது மட்டுமல்ல. சமூகத்தில் எவரேனும் அசௌகரியத்துடன் இருந்தால், அதை நீங்கள் உணரக்கூடியவர்களாக இருக்க வேண்டும். பெண்களின் உணர்வுபூர்வமான பிரச்சினைகளின் போது உங்களுக்கு பச்சாதாபம் இருக்க வேண்டும். மேலும், அப்படிப்பட்ட ஒரு குடிமகனாக சமூகத்தில் வாழ்வதற்கான புரிதல் உங்களிடத்தில் இருந்தால் மட்டுமே நீங்கள் பெற்றிகரமான ஒரு பிரஜை.
இங்கிருந்து ஆரம்பித்து பாடசாலை மட்டத்தில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்துகிறோம். கல்வி என்பது பெரிய ஒரு தலைப்பு. இந்த சமூகத்திற்கு, இந்த சமுதாயத்திற்கு முக்கியமான தலைமைத்துவத்தை வழங்கவும் வழிநடத்தக்கூடிய மற்றும் சமூகத்தில் உள்ள அனைவரையும் குணப்படுத்தக்கூடிய அடுத்த தலைமுறையை உருவாக்குதலும் கல்வியினூடாக இடம்பெறுதல் வேண்டும். ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதும், ஒருவருக்கொருவருடன் எவ்வாறு நடந்துகொள்வதும் உள்ளிட்ட அனைத்தும் கல்வியில் இருக்க வேண்டும்.
எனவே, சுகாதாரம் என்பது ஆரோக்கியத்திற்கு மட்டும் வரையறுக்கப்படக்கூடிய ஒன்றல்ல. சுகாதாரம் என்பது மாதவிடாய் சுழற்சியைப் பற்றி மட்டும் பேசுவது அல்ல. பாடசாலைக்குள்ளும், பொது சமூகத்திலும் சுகாதார வசதிகளுக்கான ஆகக் குறைந்த வசதிகள் கிடைப்பதை அரசாங்கம் ஒரு அடிப்படை உரிமையாகக் கருதுகிறது. சுகாதாரம் என்பது மறைக்கப்பட வேண்டிய ஓர் விடயமல்ல.
எனவே இந்த சமூகமானது ஒருவரையொருவர் மதிக்கும், சமூக நீதி மற்றும் சமத்துவம் கொண்ட ஒருவரையொருவர் பாதுகாக்கும், ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளும், மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் சமூகமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், குடும்ப சுகாதார பணியகம் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஊடக பிரிவு