• சீர்திருத்தம் 2026 இல் நடைமுறைப்படுத்தப்படுவது தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றுக்கே, அடிப்படை முன்னுரிமை அதற்காக பெற்றுக் கொடுக்கப்படும்.

    சீர்திருத்தம் 2026 இல் நடைமுறைப்படுத்தப்படுவது தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றுக்கே, அடிப்படை முன்னுரிமை அதற்காக பெற்றுக் கொடுக்கப்படும்.

    ஆசிரியர் பேசுகின்ற பிள்ளைகள் அதனைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற சம்பிரதாய முறைக்கு 50 நிமிட காலப்பகுதி என்று பார்த்திருக்க வேண்டாம்.

    திசைகாட்டி அரசாங்கத்திற்கு மொடியுள்களுக்கான பேடன்ட் உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இல்லை.

    – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

    2026ஆம் ஆண்டில் தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றுக்கு மாத்திரம் புதிய கல்விச் சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்படுவதால் அடிப்படை முன்னுரிமை அதற்காக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும், ஆசிரியர் பேசுகின்ற பிள்ளைகள் அதனைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற சம்பிரதாய கற்றல் செயற்பாட்டில் இருந்துகொண்டு 50 நிமிட காலப்பகுதி தொடர்பாக விமர்சனம் செய்ய வேண்டாம் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

    புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் சபரகமுவ மாகாண கல்வி அதிகாரிகளைத் தெளிவூட்டும் வகையில் இன்று (26) இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது பிரதமர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

    இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய பின்வருமாறு தெரிவித்தார்.

    தற்போதுள்ள கல்வி முறைமை நூற்றுக்கு நூறு விதம் தவறானது என்று நாம் கூறவில்லை. இந்தக் கல்வி முறைமையினுடாக திறமையானவர்கள் உருவாக்கப்பட்டார்கள். எனினும் வருடந்தோறும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இடைவிலகிச் சென்றார்கள். அவர்கள் தொடர்பில் யாரும் கரிசனை கொள்ளவில்லை. புதிய கல்விச் சீர்திருத்தமானது இதுவரையில் காணப்பட்ட பாடவிதான மேம்பாட்டுக்கு அப்பாற் சென்று ஒட்டுமொத்த கட்டமைப்பினையே மறுசீரமைக்கின்றது.

    2026ஆம் ஆண்டில் இந்த முறைமை அறிமுகம் செய்யப்படுவது தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றுக்கே. அதற்கான அடிப்படை முன்னுரிமை பெற்றுக் கொடுக்கப்படும். படிப்படியாக அடுத்தகட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். கல்விச் செயற்பாட்டினுள் இருக்கும் தீர்மானமிக்க காரணியாகத் திகழ்பவர் ஆசிரியரே. ஆசியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முறையான ஆசிரிய இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஆசிரிய சமநிலையை உரிய முறையில் பேணுதல் வேண்டும்.

    சபரகமுவ மாகாணத்தில் பிள்ளைகளின் எண்ணிக்கை 10ஐ விடவும் குறைவாக உள்ள பாடசாலைகளும் உள்ளன. சில பாடசாலைகளில் ஒரு ஆசிரியருக்கு உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆகும். இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆசிரிய இடமாற்றம் தொடர்பிலான பேச்சுவார்த்தை தற்பொழுது அமைச்சில் இடம்பெற்று வருகின்றது. எதிர்காலத்தில் அது பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

    2024ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது தெரியவந்த ஒரு விடயம், 20,000 பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைவிலகியுள்ளனர். இன்றும் அந்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. அதேவேளை 80,000 மாணவர்கள் முறையாக பாடசாலைக்கு வருகை தருவதில்லை. இதுவும் பாரியதொரு பிரச்சினை ஆகும்.

    தற்பொழுது கல்விக் கட்டமைப்பானது ஒரு சிலரின் அர்ப்பணிப்பின் மீதே ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு நபரின் தோளின் மீது கல்விக் கட்டமைப்பு செயற்பட முடியாது. ஒரு கட்டமைப்பாக வலுவான நிலையில் அது இயங்க வேண்டும்.

    தற்பொழுது காலஅட்டவணையை 50 நிமிடங்கள் வரையில் நீடித்தமை தொடர்பில் இடம்பெறுகின்ற ஒரு கலந்துரையாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சம்பிரதாய கற்றல் முறைமைகளில் இருந்து கொண்டு இந்த நேரத்தைப் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டாம். ஆசிரியர்கள் பேசுகின்ற பிள்ளைகள் கேட்டுக்கொண்டிருக்கின்ற முறைமையல்ல புதிய கல்விச் சீர்திருத்தத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. செயற்பாட்டு ரீதியில் பிள்ளைகளை பங்குகொள்ளச் செய்யும் ஒரு முறைமையாகும்.

    மொடியுள் முறைமையை அறிமுகம் செய்வது திசைகாட்டி அரசு மொடியுள்களுக்கான பேடன்ட் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காகவல்ல, அது இன்றைய உலகம் பயன்படுத்துகின்ற ஒரு முறைமையாகும்.

    இதுவரை காலம் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமது பெயரைப் பிரசாரம் செய்து கொள்வதற்காகவே கல்வியை பயன்படுத்தியுள்ளதாகவும், வாக்குகளைப் பெறும் குறிக்கோளுடன் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொண்டதன் காரணமாக கல்வியானது மேலும் குழப்பகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த நிலைமை தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

    இங்கு கருத்துத் தெரிவித்த கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன அவர்கள்,

    யாரோ ஒரு தரப்பினருடைய தேவையின் பொருட்டு நாம் கல்விச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் புத்திஜீவிகளின் அறிவினைப் பயன்படுத்தவில்லை எனவும் சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நாம் அதனை முழுமையாக நிராகரிக்கின்றோம். நாம் யாருடைய தேவைக்காகவும் அல்ல, தேசிய தேவைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். அவர்கள் சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்யும் தகவல்களுக்கும் புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கும் இடையில் எதுவிதமான தொடர்பும் இல்லை என்ற விடயத்தினை நாம் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

    இந்த நிகழ்விற்கு சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் சாந்த பத்மகுமார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவம் செய்து உத்தியோகத்தர்களும் மாகாணத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    ஊடகப் பிரிவு

    Upendra Lakmali

    2025-07-27
    கல்வி, கல்வி சீர்திருத்தங்கள்
    செய்தி
  • மாணவர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சாதகமான முன்மொழிவுகளை புதிய கல்விச் சீர்திருத்தத்தில் உள்ளடக்குவதற்கு நாம் தயார்.

    மாணவர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சாதகமான முன்மொழிவுகளை புதிய கல்விச் சீர்திருத்தத்தில் உள்ளடக்குவதற்கு நாம் தயார்.

    எனது பிள்ளைப் பருவத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான பிள்ளைப் பருவத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

    மாணவர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சாதகமான முன்மொழிவுகளை புதிய கல்விச் சீர்திருத்தத்தில் உள்ளடக்குவதற்கு தாம் தயார் எனவும், தமது பிள்ளைப் பருவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான பிள்ளைப் பருவத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

    இன்று (26), இரத்தினபுரி, சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வை பார்வையிட்ட பிறகே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

    “தற்போதைய பாடசாலைக் கல்விச் சீர்திருத்தம் மூலமாக உலகைக் காணும் பிள்ளைகள் எதிர்காலத்தில் புவியியல் சார்ந்த சவால்களை வெற்றிகொள்ளத் தயாரா?” எனும் தலைப்பின் கீழ் மாணவர் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு, பாராளுமன்ற அமர்வுகள் நிறைவுபெற்றதன் பின்னர் பிரதமரின் கரங்களால் பிள்ளைகளுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

    அதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

    புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக பெரியவர்களை விடவும் கூடிய தெளிவினை மாணவர் பாராளுமன்றப் பிள்ளைகள் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் மிகச் சிறப்பாக பகுப்பாய்வு செய்திருந்தனர். அதிலுள்ள நன்மை-தீமைகள், சவால்கள் தொடர்பில் மாணவர் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பான வகையில் நீங்கள் விடயங்களை முன்வைத்தீர்கள். உண்மையில் நான் ஒரு விடயத்தை முன்மொழிகிறேன். நீங்களும் இதைப் பற்றி பேசுங்கள், இந்த கல்விச் சீர்திருத்தம் என்பது அமைச்சிலுள்ள உத்தியோகத்தர்கள் அல்லது அமைச்சர்கள் மாத்திரம் இணைந்து தயாரிக்கும் ஒன்றாக இருக்க முடியாது. இக்கல்விச் சீர்திருத்தம் என்பது ஒரு நாட்டில் இடம்பெறும் கலந்துரையாடலினூடாக நாம் இணைந்து உருவாக்கிக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதற்கு நேரடியாக இளம் சந்ததியினர், மாணவ மாணவிகள் இணைந்து கொள்ள வேண்டும். எனவே நான் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் விசேட பாராளுமன்ற அமர்வொன்றினை நடத்தியேனும் கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக உங்களது வயதினைச் சார்ந்த ஏனைய மாணவ மாணவிகளிடம் கருத்துக்களைப் பெற்று எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

    எனக்கு பாடசாலை மாணவியொருவர் சூழல் நேயமிக்க கருத்திட்ட முன்மொழிவொன்றினை ஒப்படைத்தார். அந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது.

    மாணவர் பாராளுமன்றத்தின் இன்றைய விவாதத்தில் அமைச்சர் ஒருவர் ஆற்றிய உரை என்னை மிகவும் கவர்ந்தது. அதுதான் பிள்ளைப் பருவத்தினரின் மகிழ்ச்சியைப் பற்றிப் பேசுகின்ற பெரியவர்கள் எமது பிள்ளைப் பருவத்தை அழித்து விடுகின்றனர் எனத் தெரிவித்தார். நான் இன்று ஒரு தீர்மானத்தை எடுத்தேன், இனிமேல் எனது பிள்ளைப் பருவத்தைப் பற்றி நான் பிள்ளைகளுடன் கதைப்பதில்லை, அதற்குப் பதிலாக இந்நாட்டின் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான பிள்ளைப் பருவத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

    அதேபோல் நீங்கள் அனைவரும் மாணவர் பாராளுமன்ற அமர்வினை முகாமைத்துவம் செய்த விதம், அதேவேளை உரையாற்றி விதம் என்பவற்றைப் பார்க்கின்ற போது, அவற்றைக் கேட்கின்ற போது மனதுக்கு பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் தோன்றியது. எதிர்கால நாட்டைப் பற்றிய ஒரு நம்பிக்கை எழுந்தது. எதிர்கால சந்ததியினர் முன்னேற்றகரமானவர்கள், எதிர்கால சந்ததியினர் மிகவும் திறமையானவர்கள் என்று.

    அதிபர் உள்ளிட்ட ஆசிரிய குழாத்தினருக்கும், பெற்றோர்களுக்கும் இத்தகையதொரு பிள்ளைச் சமூகத்தை உருவாக்கியமை தொடர்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

    புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பத்மகுமார, சுனில் ராஜபக்‌ஷ, வைத்தியர் ஜனக, மாகாண கல்விப் பணிப்பாளர், மாவட்டத்தின் கல்வி அதிகாரிகள், சீவலி மத்திய கல்லூரியின் அதிபர் நீல் தம்மிக வத்துகாரவத்த உள்ளிட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

    ஊடகப் பிரிவு

    Upendra Lakmali

    2025-07-26
    கல்வி, கல்வி சீர்திருத்தங்கள்
    செய்தி
  • தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பாடத்திட்டத்தில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் பல புதிய சீர்திருத்தங்கள்.

    தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பாடத்திட்டத்தில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் பல புதிய சீர்திருத்தங்கள்.

    – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

    2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பள்ளிக் கல்வி முறையில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்காக பாடத்திட்டத்தில் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய ஜூலை 09 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

    இந்தப் புதிய திருத்தங்களின் கீழ், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொழிற்கல்வி பாடங்கள் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு ஒரு குழுப் பாடமாக அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, 10 ஆம் வகுப்பு முதல் நான்கு பள்ளி ஆண்டுகள் தொழிற்கல்வி பாடத்தைப் படித்த பிறகு மாணவர்கள் NVQ 4 சான்றிதழைப் பெற முடியும்.

    இந்த நோக்கத்திற்காக பாடத்திட்டம் மற்றும் தொகுதிகளை உருவாக்கும் பணிகள் தற்போது தேசிய கல்வி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தற்போது உயர்தர தொழிற்கல்வி பாடங்கள் கற்பிக்கப்படும் 609 பள்ளிகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

    பள்ளிக் கல்விக்குப் பிறகு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வித் துறையை மேம்படுத்துவதற்கான ஒரு மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் அந்தப் பிரிவு தொடர்பாக அந்தத் துறையுடன் தொடர்புடைய அனைத்து கூட்டாளர்களுடனும் கூட்டங்களை நடத்தி, ஆரம்ப வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையான வரைவு சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

    தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறைக்கான ஆசிரியர் பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, அந்தத் திட்டத்தின் கீழ், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் தொழிற்கல்வி பாடங்களைக் கற்பிக்க புதிய ஆசிரியர்களை நியமித்து, ஆசிரியர் கல்லூரிகள் மூலம் அவர்களுக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை கற்பிப்பதற்காக ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தொழில்துறை துறையின் உதவியுடன் பல்வேறு தொழிற்கல்வி துறைகளில் சமகால போக்குகள் மற்றும் அனுபவங்களை வழங்கும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஆண்டுதோறும் ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதே பாடத் துறையில் தற்போதைய போக்குகளுக்கு ஏற்ப தொழிற்கல்வி பாடப் பிரிவு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்குள் பாடத் தொகுதிகளில் தேவையான மாற்றங்களைச் சேர்ப்பதை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

    ஊடக அலகு.

    Upendra Lakmali

    2025-07-09
    கல்வி, கல்வி சீர்திருத்தங்கள்
    செய்தி
  • புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் பற்றிய மதிப்பாய்வை செய்து ஒழுங்குறுத்துக.
    கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை.

    புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் பற்றிய மதிப்பாய்வை செய்து ஒழுங்குறுத்துக.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை.

    தேசிய கல்வி ஆணைக்குழுவின் புதிய உத்தியோகத்தர்கள் சபைக்கும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் தேசிய கல்வி ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

    இதன்போது புதிய உத்தியோகத்தர்கள் சபை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புதிய கல்விச் சீர்த்திருத்தத்திற்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிகள் பற்றியும் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

    2026 முதல் புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை தொடங்குவதற்குத் தயார் என்றும், அதற்காக கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்கள் கூட்டிணைந்து சரியான முறையில் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை மேற்கொள்ளும்போது தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு இருக்கும் பொறுப்பு பற்றியும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், ஆணைக்குழுவில் நிலவுகின்ற சிக்கல்கள் குறித்தும், எதிர்காலத்தில் செய்யவேண்டிய செயற்றிட்டம் குறித்தும் இதன்போது அமைச்சர் விடயங்களை தெளிவுப்படுத்தினார்.

    புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை முன்னெடுக்கும்போது பாடசாலைகள் பற்றிய மதிப்பாய்வினை மேற்கொள்ளல் மற்றும் ஒழுங்குறுத்தல் பணிகள் தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், கல்விக் கொள்கையை மேலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.

    கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ.சரத் ஆனந்த, உப தலைவர் திலக் தர்மரத்ன ஆகியோரை உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.


    Upendra Lakmali

    2025-06-20
    கல்வி, கல்வி சீர்திருத்தங்கள்
    செய்தி
  • 2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்விசார் மாற்ற நடவடிக்கைக்குரியதான வழிகாட்டுதல்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்.

    2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்விசார் மாற்ற நடவடிக்கைக்குரியதான வழிகாட்டுதல்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்.

    2026 ஆம் ஆண்டு செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்விசார் மாற்ற நடவடிக்கைக்குரியதான வழிகாட்டுதல்களை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மற்றும் அதற்குரியதாக ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜூன் 16 ஆம் திகதி, மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

    2026 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகியவற்றுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுமெனவும், 2028 ஆம் ஆண்டு தரம் 10 இற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது எனவும், 2029 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை புதிய பாடத்திட்டத்தின்படி நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், மற்றும் தரம் 9 தொடக்கம் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
    இதன்போது, ​​தேசிய கல்வி நிறுவகத்தின் ஒவ்வொரு பிரிவின் தலைவர்களும் இக்கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான செயல்முறையை தங்கள் பிரிவுகள் மூலம் செயற்படுத்தும் விதம் மற்றும் அதன் தற்போதைய நிலைமை தொடர்பில் அமைச்சரைத் தெளிவுபடுத்தினர்.

    இது பாடத்திட்டங்களைத் திருத்துதல், ஆசிரியர் பயிற்சி, நிர்வாக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், முறையான மதிப்பீட்டுச் செயன்முறையொன்றினை உருவாக்குதல் மற்றும் இதற்காக பொதுமக்களின் பங்கேற்பு ஆகிய 5 தூண்களை (காரணிகளை) அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கல்விசார் மாற்றம் எனவும், இதன்போது உயர்ந்த மனப்பான்மை கொண்ட ஆசிரியர்களை உருவாக்குவது தேசிய கல்வி நிறுவகங்களின் பொறுப்பு என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும் இச்சீர்திருத்தங்களுடன் மாத்திரம் நின்றுவிடாது இவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பில் ஆராய்வதற்கும் முறையான மதிப்பீட்டுச் செயன்முறையொன்றினை உருவாக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    மேற்படி கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ அவர்கள், மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் திருமதி.மஞ்சுளா வித்தானபதிரன மற்றும் அந்நிறுவகத்தின் அனைத்துத் துறைகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    Upendra Lakmali

    2025-06-17
    கல்வி, கல்வி சீர்திருத்தங்கள்
    செய்தி

கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல

+(94) 11- 278 5141 / 142 / 143 / 144

+(94) 11- 278 5162

info@moe.gov.lk

தள வழிசெலுத்தல்
  • அமைச்சகம் பற்றி
  • பயிற்சி வாய்ப்பு
  • சுற்றறிக்கைகள்
  • கல்வி சேவைகள்
  • கொள்கைகள் மற்றும் வெளியீடுகள்
  • கொள்முதல் அறிவிப்புகள்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • தள வரைபடம்
ஊடக மையம்
  • செய்தி
  • சிறப்பு அறிவிப்புகள்
  • செய்திக்குறிப்பு
  • நிகழ்வுகள்
  • புகைப்பட தொகுப்பு
  • வீடியோ தொகுப்பு

பதிப்புரிமை © 2024 – கல்வி அமைச்சு | அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன

வடிவமைத்து உருவாக்கியது:
வெப்காம்ஸ் குளோபல் (பிவிடி) லிமிடெட்.

விதிமுறைகள் மற்றும் சேவைகள்