கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பட்டதாரிகள் சங்கம் மற்றும் அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்துடன் கல்வி அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
ஆசிரியர் சேவைக்கு பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து தீர்ப்பு கிடைத்த பிறகு ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பின்படி நிலவும் சட்டக் கட்டமைப்பிற்குள் எதிர்காலத்தில் நியமனங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.








