பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்விக்கல்லூரி மாணவச் செயற்பாட்டாளர்கள் குழுவின் உறுப்பினர்களுக்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது, மேற்படி கலந்துரையாடலுக்கு அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
அதன்போது மாணவச் செயற்பாட்டாளர்கள் தமது நலன்புரி மற்றும் கல்வி சார்ந்த பிரச்சினைகளை பிரதம அமைச்சரிடம் முன்வைத்தனர். தேசிய தொழிற்கல்வி தொழில்நுட்பப் பயிற்சியைப் பெறும் மாணவர்கள் இரண்டு அல்லது மூன்று வருட பயிற்சிக்குப் பிறகு தொழிற்கல்வி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததன் பின்னர் அங்கும் மூன்று வருட பாடநெறியைக் கற்க வேண்டியிருப்பது மற்றும் அந்த காலத்தைக் குறைத்துக்கொள்வது தொடர்பிலும் இதன்போது மாணவச் செயற்பாட்டாளர்கள் விடயங்களை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் புதிய தேசிய திறன்களை நிறைவேற்றியமையும் அழகுக்கலை பாடநெறியிலிருந்து சில பாடப் பகுதிகள் நீக்கப்பட்டதனூடாகவும் பாடநெறியின் பண்புத்தரத்தில் சிறிது சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்த அதேவேளை, மேற்படி நிலைமை தொடர்பில் ஆராய்ந்து துரித அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு பிரதமர் இதன்போது அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதன்போது அனுராதபுரம் பல்கலைக்கழகக் கல்விக்கல்லூரி மற்றும் ஏனைய கல்விக்கல்லூரிகளில் நிலவும் காணிப் பிரச்சினைகள் தொடர்பாகவும், இரத்மலானை தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாகப் பிரச்சினைகள் தொடர்பாகவும் குளியாப்பிட்டிய பல்கலைக்கழகக் கல்விக்கல்லூரியின் காணிகளைக் கையகப்படுத்தல் தொடர்பாகவும் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டதோடு, அவற்றுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதம அமைச்சர் அவசியமான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
ஊடக அலகு.






