சமீபத்திய செய்திகள்

ஊடக மையம்

தொழிலொன்றினை இலக்காகக் கொள்வதனை விட அதற்கு அப்பாற்பட்ட விரிவான அர்த்தப்பாட்டுடன் கூடியதான ஓர் இலக்கு கல்வித் துறைக்கு அவசியம்

|

தேதி:

|

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:


தொழிலொன்றினை இலக்காகக் கொண்டு கல்வியைப் பெற்றுக் கொடுப்பதனை விட அதற்கு அப்பாற்பட்ட விரிவான ஓர் குறிக்கோள் கல்வித் துறைக்கு அவசியம் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி நிர்வாகச் சேவை உத்தியோகத்தர்களின் திறன் மேம்பாடு தொடர்பில் கடந்த ஜூன் மாதம் 08ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரையில் இந்தியாவில் நடைபெற்ற பயிற்சி அமர்வினை நிறைவு செய்து நாட்டுக்கு வருகை தந்த கல்வி நிர்வாகச் சேவை உத்தியோகத்தர்களுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் சகல மாகாணங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இரண்டு உத்தியோகத்தர்கள் வீதம் இப்பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதோடு பொதுநலவாய நாடுகளின் ஆசிய கற்றல் ஊடக மையத்தினால் இப்பயிற்சி அமர்வு நடாத்தப்பட்டது.

இதுவரையில் எதுவிதமான வெளிநாட்டுப் பயிற்சிகளையும் பெற்றிராத நாடு முழுவதும் சேவையில் ஈடுபட்டுள்ள கல்வி நிர்வாகச் சேவையின் உத்தியோகத்தர்கள் இப்பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

இந்தியாவில் பெற்றுக்கொண்ட பயிற்சியின் அடிப்படையில் இந்நாட்டின் கல்வித் துறையில் இடம்பெறவேண்டிய மாற்றங்கள் மற்றும் குறித்த பயிற்சியைப் பெற்ற உத்தியோகத்தர்களின் பண்புத்தரம் மிக்க சேவையை கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காக ஈடுபடுத்துதல் இதன் குறிக்கோளாகும்.
கல்வி அமைச்சின் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுக் கல்விக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்ச்சிக்கு கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அமல் எதிரிசூரிய, பரீட்சைகள் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம், கல்விச் சீர்திருத்தக் கிளையின் சார்பில் அதன் உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஊடகப் பிரிவு.