தலைமை உள்ளக கணக்காய்வாளர்


திரு. டி.எஸ்.கே. தர்மவர்தனா
தலைமை உள்ளக கணக்காய்வாளர்
தலைமை உள்ளக கணக்காய்வாளர்

பிரிவின் பணிகள்

கல்வி அமைச்சின் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான செயல்பாட்டில் பௌதீக மற்றும் மனித வளங்கள் திறமையாகவும் திறம்படவும் நிர்வகிக்கப்பட்டுள்ளதா என்பதை மதிப்பீடு செய்தல்.

கல்வி அமைச்சின் மேலாண்மை நடவடிக்கைகளுக்காகப் பராமரிக்கப்படும் உள்ளக நிர்வாக முறைகளை ஆய்வு செய்த பின்னர், தவறுகள் மற்றும் மோசடிகளை வெளிப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படும் உள்ளக மேற்பார்வையின் சம்பிரதாயம் மற்றும் போதுமான தன்மை குறித்து தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டைப் பராமரித்தல்.

கல்வி அமைச்சின் உள்ளக நிர்வாக முறைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதல்.

அரச நிதிகள் வினைத்திறனாகவும் திறமையாகவும் செலவிடப்படுகின்றன என்ற உண்மையை உறுதிப்படுத்தல் மற்றும் கல்வி அமைச்சின் பௌதீக, நிதி மற்றும் மனித வளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.

கல்வி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னேற்றத்தை சரிபார்த்தல்.

கல்வி அமைச்சுடன் இணைந்த திணைக்களங்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், கல்வியியற் கல்லூரிகள், தேசிய பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்த திணைக்களங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய நிதி ஒழுக்கத்தைப் பேணுவதற்குத் தேவையான நடைமுறைகளை வழங்குதல்

கல்வி முறையில் நடைபெறும் முறைகேடுகள், ஊழல்கள் மற்றும் தவறான பயன்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளுதல் மற்றும் அவற்றை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க உயர் நிர்வாகத்திற்கு விழிப்புணர்வு செய்தல்.

பல்வேறு முறைமைகள், ஊழல்கள் என்பவற்றைத் தவிர்ப்பதற்காகவும், தற்போதைய தேவைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும், கல்வி முறைமையின் வினைத்திறனையும் உற்பத்தித்திறனையும் உருவாக்கும் நோக்கத்துடனும் தொடர்ச்சியான முறையான இருப்புக்காக தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப சுற்றறிக்கைகளை இற்றைப்படுத்துவதற்காக தேவையான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான பரிந்துரைகளை வழங்குதல்.