ஸ்தாபனம்


திரு.ஏ.ஜே.எஸ்.எஸ்.எதிரிசூரிய
மேலதிக செயலாளர்
ஸ்தாபனம்

சுயவிவரம்

திரு.ஏ.ஜே.எஸ்.எஸ்.எதிரிசூரிய, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக (தாபனம்) பணியாற்றுகின்றார். திரு.எதிரிசூரிய, இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்திலான அதிகாரியாவதுடன், நிர்வாக உத்தியோகத்தராக 24 வருட அனுபவத்தையும் அரச துறையில் 31 வருட சேவைக் காலத்தையும் கொண்டுள்ளார். தென் மாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளராக தனது சேவையை ஆரம்பித்த அவர், பின்னர் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர உதவி பிரதேச செயலாளராக பணியாற்றினார். வகுப்பு 1 அதிகாரியான அவர், மஹரகம பிரதேச செயலாளராகவும், நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், விசேட தர அதிகாரியாகவும், மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளராகவும், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் கலைத்துறை பட்டதாரியான திரு.எதிரிசூரிய, இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றதன் பின்னர் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக தொழிற் தகைமையைப் பெற்றுள்ளார். மேலும், அவர் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் அரச நிர்வாகத்தில் பட்டப்பின் படிப்பு தகைமையையும் பெற்றுள்ளார்.