கௌரவ. பிரதி அமைச்சர்

வைத்தியர் மதுர செனெவிரத்ன (MBBS (SL))

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு

தொடர்பு விவரங்கள்

சுயவிவரம் – வைத்தியர் மதுர செனெவிரத்ன (MBBS (SL))

வைத்தியர் மதுர செனெவிரத்ன அவர்கள் மக்கள் சேவைக்கென அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு மருத்துவத்துறை தொழில் வல்லுநர் என்பதோடு, இலங்கையின் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சராக பணியாற்றுகின்றார். நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாரளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அவர் 1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நுவரெலியாவில் பிறந்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். பட்டத்தைப் பெற்றுள்ள வைத்தியர் மதுர செனெவிரத்ன அவர்கள் அரசியல் சார்ந்த தொழிற்றுறைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னர் பயிற்சி மயக்கவியல் மருத்துவராக சுகாதாரத் துறையில் சேவைகளை ஆற்றியுள்ளார்.

சமூக சமத்துவம், கல்வி மறுசீரமைப்பு மற்றும் தொழிலாளர் உரிமைள் தொடர்பிலான செயற்றிறன்மிக்க செயற்பாட்டாளராகிய அவர் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தில் நுவரெலியா மாவட்டத்தின் அழைப்பாளராகவும் சமவுடமை தொழிலாளர் சங்கத்தின் குழு உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார். இலங்கை – சீனா வூஷு நட்புறவு சங்கத்தினதும் இலங்கை – தாய் சீ சங்கத்தினதும் உப தலைவராகவும் பணியாற்றுவதனூடாக சர்வதேச கலாசார விடயங்களிலும் ஈடுபட்டு தமது தலைமைத்துவத்தை விரிவுபடுத்தியுள்ளார். இவற்றுக்கு மேலதிகமாக தேசிய புத்திஜீவிகள் ஒன்றியத்தின் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கல்விசார் மற்றும் அறிவுசார் அபிவிருத்திக்கும் தமது பங்களிப்பினை நல்கி வருகின்றார்.