“புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்படும் கல்விப் பேரவை” என்ற பெயரில் ஒவ்வொரு கல்வி வலயத்திலும் உள்ள ஆசிரியர்களை ஒன்றிணைப்பதற்காக ஒரு குழுவினாரால் வாட்ஸ்அப் கூட்டு வலையமைப்பொன்று பராமரிக்கப்பட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்அப் குழுவானது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினாலோ அல்லது அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய பராமரிக்கப்படுவதில்லை என்பதுடன், அக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அமைச்சு எந்த வகையிலும் பொறுப்பேற்காது எற்பதையும் அறியத்தருகிறோம்..
அத்துடன், புதிய கல்விச் சீர்திருத்த வேலைத்திட்டத்தையும் அரசாங்கத்தையும் அசௌகரியப்படுத்தும் நோக்கில் பராமரிக்கப்படும் இவ்வகையான போலி குழுக்களிடம் ஏமாற வேண்டாம் என்றும், அது குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
ஊடகப் பிரிவு




