2025ம் ஆண்டு முதல் பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதிப்பது (தரம் 5 மற்றும் 6 தவிர்த்து) தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினால் 2025.09.09 ம் திகதியுடைய 27/2025 சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றுநிருபத்தின் பிரகாரம் 2025 கல்வி வருடத்தில் தேசிய பாடசாலைகளின் இடை நிலைத் தரங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதற்கமைய, 2025.06.30 ம் திகதிக்கு தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களில் நிலவுகின்ற வெற்றிடங்கள் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் இணையத் தளத்தில் பிரசுரிக்கப்படும்.
குறித்த வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் 27/2025 சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களைப் பூரணப்படுத்தி 2025.09.26 ம் திகதிக்கு முன்னர் அனைத்து மேலதிக ஆவணங்கள் சகிதம் உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பிவைக்குமாறு தயவுடன் அறியத் தருகின்றேன்.
