நிர்வாகம் – பிரிவேனா கல்வி


திரு.பி.எல்.பத்மகுமார
மேலதிக செயலாளர்
நிர்வாகம் – பிரிவேனா கல்வி

சுயவிவரம்

திரு.பி.எல்.பத்மகுமார அவர்கள் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக (நிர்வாகம் – பிரிவென் கிளை) உள்ளார். இவர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியாவார், இவர் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தித் துறையில் இருபத்தி நான்கு வருட(24) கால அனுபவத்தைக் கொண்டுள்ளார். 2000 ஆம் ஆண்டில் அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பொது நிர்வாகத்தில் தனது சேவையை ஆரம்பித்த அவர், அதன் பின்னர் பிரதேச மட்டத்திலும், திணைக்களங்களிலும், அமைச்சுக்களிலும் உதவிப் பிரதேச செயலாளர், உதவிப் பணிப்பாளர், உதவிக் கட்டுப்பாட்டாளர், சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் பணிப்பாளர், மேலதிக செயலாளர் போன்ற பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். திரு.பி.எல்.பத்மகுமார கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் (சமூகவியல்)இளங்கலை பட்டதாரியும், களனி பல்கலைக்கழகத்தில் கலை முதுமாணி (சமூகவியல்) பட்டமும் பெற்றுள்ளார். மற்றும் இலங்கை மேம்பாட்டு நிர்வாக நிறுவனத்தில் (SLIDA) பொது நிர்வாகத்தில் டிப்ளோமாவும் பெற்றுள்ளார்.