மேலாண்மை மற்றும் தரநிலைகள் துறை


திருமதி. எச்.டி.கே. குமாரி
கல்வி இயக்குனர்
மேலாண்மை மற்றும் தரநிலைகள் துறை

கிளையின் பணிகள்

கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாட்டொகுதியினரிடையே காணப்பட வேண்டிய அனைத்துத் தேர்ச்சிகளையும் இனங்கண்டு அவர்களுடன் தொடர்புடைய அளவுகோல்களைத் தயாரித்து முறைமைக்கு அறிமுகப்படுத்துதல்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களினால் பௌதிக வளங்களுடன் தொடர்புடைய நியமங்கள் மற்றும் மாதிரிகளைச் சேகரித்தல் அல்லது நிபுணர்களின் உதவியுடன் தயாரித்தல் மற்றும் முறைமைக்கு அவற்றை அறிமுகப்படுத்துதல்.

பாடசாலைகளில் சுய அபிவிருத்திக்கான தர அபிவிருத்தி பற்றிய முகாமைத்துவ செயல்முறையை அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.

பாடசாலைகளின் சுய அபிவிருத்திக்கு அவசியமான பரந்த மற்றும் தொடர்ச்சியான உள்ளக மதிப்பீட்டுச் செயன்முறைக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய மதிப்பீட்டு கருவிகளை அறிமுகப்படுத்துதல்.

பாடசாலைகளின் சுய அபிவிருத்திக்கு அவசியமான பரந்த மற்றும் தொடர்ச்சியான உள்ளக மதிப்பீட்டுச் செயன்முறைக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய மதிப்பீட்டு கருவிகளை அறிமுகப்படுத்துதல்.

பாடசாலையில் வெளி மதிப்பீடுகளுக்காக அமைச்சின் உத்தியோகத்தர் குழுவினால் பயன்படுத்தப்படும் கருவிகளைத் தயாரித்தலும் அந்த மதிப்பீட்டுச் செயன்முறையை உரிய முறையில் நடைமுறைப்படுத்தலும்.