இருமொழி கல்வி கிளை


திருமதி. பி.டி. இரோஷினி கே. பரணகம
கல்வி இயக்குனர்
இருமொழி கல்வி கிளை

கிளையின் பணிகள்

இருமொழிக் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் நடவடிக்கைகளை எடுத்தல்.

இருமொழி ஆசிரியர்கள், இணைப்பக அலுவலர்கள், பாட வளவாளர்களின் திறனை விருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தல். மனித வள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.

இருமொழிக் கல்வியை விரிவுபடுத்துவதற்குத் தேவையான திட்டங்களையும் உபாயங்களையும் தயாரித்தலும் நடைமுறைப்படுத்தலும்.

இருமொழி மாணவர்களின் பெறுபேறுகளையும் தரமான கல்வி அபிவிருத்தியையும் விருத்தி செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குதல்

இருமொழிக் கல்வி பற்றி மாகாண, வலய, பாடசாலை மட்டங்களில் கிடைக்கக் கூடிய தகவல்களை இற்றைப்படுத்துதல்.

இருமொழிக் கல்வி தொடர்பான ஆசிரியர்கள்/ மாணவர்கள் மற்றும் வகுப்பறைகளின் பிரச்சினைகளைத் தீர்த்தல்.

ஆவணங்கள் / பதிவிறக்கங்கள்