சமீபத்திய செய்திகள்

ஊடக மையம்

“ஒட்டுமொத்த நாட்டிலும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டுக்கு பங்களிப்பது மகா சங்கத்தினரின் தேசிய கடமையாகும்…”

|

தேதி:

|

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:


புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது வெறும் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படும் மாற்றம் மாத்திரமன்றி, அதனூடாக ஒட்டுமொத்த நாட்டிலும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதால் அதற்கு பங்களிப்பது மகா சங்கத்தினரின் தேசிய கடமையாகும் என இலங்கை அமரபுர நிகாயத்தினதும் ராமண்ய நிகாயத்தினதும் மகா சங்கத்தினர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் தெரிவித்தனர்.

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக அமரபுர, ராமண்ய நிகாயங்களின் தலைமைத்துவ மகா சங்கத்தினரை தெளிவூட்டும் விசேட கலந்துரையாடல் பிரதமரின் பங்குபற்றலுடன் ஆகஸ்ட் 04ஆம் திகதி இலங்கை ராமண்ய மகா நிகாயத்தின் மகா சங்கத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது புதிய கல்விச் சீர்திருத்தங்களின் தேசிய தேவைப்பாடு, பாடத்திட்டங்கள், மதிப்பீட்டுச் செயற்பாடுகள் இடம்பெறும் விதம் மற்றும் சீர்திருத்தங்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பிலான விரிவான விளக்கம் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ ஆகியோரினால் மகா சங்கத்தினருக்கு வழங்கப்பட்டது. அதன்போது மகா சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களுடன் கலந்துரையாடி அவற்றுக்கான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

புதிய கல்விச் சீர்திருத்த செயற்பாட்டின் போது கல்வி அமைச்சு. தேசிய கல்வி நிறுவகம், தேசிய கல்வி ஆணைக்குழு, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களுக்குரித்தான விசேட பொறுப்புக்கள் மற்றும் அந்நிறுவனங்களுக்கிடையில் காணப்பட வேண்டிய சிறந்த தொடர்புகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மகா சங்கத்தினர் இதன்போது பிரிவொனாக் கல்வி, தம்ம பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிக் கல்வி முறைமையில் இடம்பெற வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதுடன், முன்மொழிவு சீர்திருத்தம் மூலமாக பாடசாலையில் இரண்டாம் மொழிக் கற்றலுக்கு கூடுதல் சந்தர்ப்பமளித்தலின் முக்கியத்துவம் தொடர்பிலும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் ஒரு அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் என்ற வகையில் இந்த சீர்திருத்தம் தொடர்பில் விரிவான தெளிவுடன் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ ஆகியோர் மேற்கொள்ளும் இந்த தெளிவுபடுத்தல் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பில் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும் எனத் தெரிவித்து இதன்போது மகா நிகாயங்களின் மகா சங்கத்தினரால் ஆசிர்வாதம் அளிக்கப்பட்டது.

இலங்கை அமரபுர மகா நிகாயத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி மகா விஹார வங்ஷிக அமரபுர மகா நிகாயத்தின் மகோபாத்யாய இலக்கிய மேதை கந்துனே அஸ்ஸஜி மகா நாயக்க தேரர், அமரபுர தர்மரக்‌ஷித தரப்பின் மகா நாயக்க அக்க மஹா பண்டித திரிகுணாமலே ஆனந்த மகா நாயக்க தேரர்,​ இலங்கை அமரபுர மகா சங்க சபையின் மகா பதிவாளர் தத்துவஞானி பலபிட்டியே சிரிசீவலி மகா நாயக்க தேரர்,​ இலங்கை ராமண்ய மகா நிகாயத்தின் நீதி அதிகரண சங்கநாயக்க அக்ர மஹா பண்டித பேராசிரியர் அத்தன்கனே ரதனபால மகா நாயக்க தேரர், ராமண்ய மகா நிகாயத்தின் அனுநாயக்க வலேபொட குணசிரி மகா நாயக்க தேரர், ராமண்ய மகா நிகாயத்தின் அனுநாயக்க ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் தீவெல மஹிந்த மகா நாயக்க தேரர், ராமண்ய மகா நிகாயத்தின் மகா பதிவாளர் முதுகலைமானி அத்தன்கனே சாசனரதன மகா நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர்களும் தெனிகாயே மகா நாயக்க தேரர்கள் மற்றும் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கல்வி அமைச்சின் கல்விச் சேவைகள் மேலதிக செயலாளர் கமல் ஆரியசேன உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.