கல்வி அமைச்சர்

கௌரவ. கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் பா.உ.

அச்சிகே தொன் சுசில் பிரேமஜயந்த (பிறப்பு - 1955 சனவரி 10) அவர்கள் இலங்கையின் அரசியல்வாதியும் பாராளுமன்ற உறுப்பினருமாவார்.

கல்வி

சுசில் பிரேஜயந்த அவர்கள் நுகேகொடை புனித ஜோன் கல்லூரியில் தமது ஆரம்பக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியைப் பெற்றுக் கொண்டார். பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1982 ஆம் ஆண்டு சட்ட இளமாணிப் பட்டத்தைப் பெற்று 1984 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பணிகளை ஆரம்பித்தார். 2004 ஆம் ஆண்டு அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் பற்றிய முதுகலை பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

அரசியல் தொழிற்றுறை

பிரேமஜயந்த அவர்கள் தமது அரசியல் வாழ்க்கைப் பயணத்தை 1991 ஆம் ஆண்டு கோட்டே நகர சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன் ஆரம்பித்தார். 1993 ஆம் ஆண்டு மேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அவர் 1995 ஆம் ஆண்டு மேல் மாகாணத்தின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.

2000 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்திலிருந்து முதன் முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அவர் கல்வி அமைச்சராக பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன முன்னணி தோல்வியடைந்த போதிலும், பிரேமஜயந்த அவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அதேவேளை அதன் பின்னர் இடம்பெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அவர் தமது தொகுதியின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டார்.

2004 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தாபிக்கப்பட்டதுடன் அதன் முதலாவது பொதுச் செயலாளராக பிரேமஜயந்த அவர்கள் நியமிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதுடன் அந்த அரசாங்கத்தில் பிரேமஜயந்த அவர்களுக்கு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட வேளையில் அவருக்கு மீண்டும் கல்வி அமைச்சுப் பதவி ஒப்படைக்கப்பட்ட அதேவேளை, 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் பெற்றோலியக் கைத்தொழில் அமைச்சராக பணியாற்றினார். அத்துடன், 2013 ஆம் ஆண்டு அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி சுற்றாடல் மற்றும் மீள்புத்தாக்க வலுசக்தி அமைச்சுப் பதவியில் நியமிக்கப்பட்டார். பொதுத் தேர்தலின் சில நாட்களுக்குப் பிறகு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் விலகிக் கொண்டார். இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றினை தாபிப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர் பிரேமஜயந்த அவர்கள் விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்

இலங்கையின் கல்வி அமைச்சர்

இலங்கையின் மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சர்

இலங்கையின் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்

இலங்கையின் 15 ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் (2015 – 2020)

இலங்கையின் 14 ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் (2010 – 2015)

இலங்கையின் 13 ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் (2004 – 2010)

இலங்கையின் 12 ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் (2001 – 2004)

இலங்கையின் 11 ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் (2000 – 2001)

கொழும்பு மாவட்டத்திலிருந்து இலங்கைப் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்

கம்பஹா மாவட்டத்திலிருந்து இலங்கைப் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்

 

 

செயலாளர் - கல்வி அமைச்சு

திரு. எம்.என். ரணசிங்ஹ அவர்கள்

ஸ்ரீ  ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணி (வர்த்தக நிருவாகம்) விசேட பட்டத்தினையும் ஸ்ரீ  ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்தில் திறமைச் சித்தியைக் கொண்ட அரச நிருவாகம் பற்றிய பட்டப்பின் பட்டத்தினையும் பெற்றுள்ள திரு. எம்.என். ரணசிங்ஹ அவர்கள் பல்வேறு பதவி நிலைகளின் கீழ் தமது பணிகளை ஆற்றியுள்ளதுடன் சுமார் 20 வருடகால அனுபவத்தைக் கொண்ட இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்தினையுடைய உத்தியோகத்தராவார்.

இவர் 1991 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையின் உத்தியோகத்தராக நியமனம் பெற்றதுடன் குருணாகல் உதவிப் பிரதேச செயலாளராக தமது கடமைகளை ஆரம்பித்தார். பின்னர் உதவி மாவட்டச் செயலாளர், வடமேல் மாகாண பிரதான அமைச்சின் உதவிச் செயலாளர் மற்றும் மாகாணக் கைத்தொழில் பணிப்பாளர் என மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் 1991ஆம் ஆண்டு தொடக்கம் 2001 ஆம் ஆண்டு வரையில் ​ பல பதவிகளை வகித்துள்ளார்.

பின்னர் கொழும்புக்கு இடம்பெயர்ந்து குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் இணைந்துகொண்டார். அங்கு உதவிக் கட்டுப்பாட்டாளராக தமது பணிகளை ஆரம்பித்த இவர் பல்வேறு பதவிகளில் கடமையாற்றியுள்ளார். 2014 ஆம் ஆண்டு இவர் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் கட்டுப்பாட்டாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தமது அரச பணிக் காலத்தினுள் பல்வேறு சர்வதேச செயலமர்வுகள், மாநாடுகள் என்பவற்றில் பங்குபற்றியுள்ள இவர் குடிவரவு முகாமைத்துவத்துறை சார்ந்த மாநாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்வுகளிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2019 நவெம்பர் தொடக்கம் 2020 ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தில் பணிப்பாளர் நாயகமாக பணிகளை ஆற்றிய பிறகு இவர் கல்வி அமைச்சின் செயலாளராக பதவியேற்று கல்வி அமைச்சுடன் இணைந்துகொண்டார்.

பின்னர் இவர் பசளை உற்பத்தி மற்றும் வழங்கல், இரசாயனப் பசளை மற்றும் பீடைக்கொல்லி பயன்பாடு ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளராக 2020 ஆகஸ்ட் தொடக்கம் 2022 மே மாதம் வரையில் கடமைகளை மேற்கொண்டார்.

தற்பொழுது இவர் கல்வி அமைச்சின் செயலாளராக தமது பணிகளை ஆற்றி வருகிறார்.

 

Additional Secretary - Policy Planning and Performance Review

திருமதி பீ. மஹேஷி வீரசூரிய

திருமதி பீ. மஹேஷி வீரசூரிய அவர்கள் கல்வி அமைச்சில் மேலதிக செயலாளராக (கொள்கைத் திட்டமிடல் மற்றும் செயலாற்றுகை மீளாய்வு) 2023 மே மாதம் 15 ஆம் திகதி முதல் தமது கடமைகளை ஆரம்பித்த அதேவேளை இவர் கல்விச் சேவையில் சுமார் 35 வருட சேவைக்கால அனுபவத்தைக் கொண்ட கல்வி நிருவாக சேவையின் முதலாம் தரத்தினைக் கொண்ட ஓர் உத்தியோகத்​தராவார். இவர் கொழும்பு தேவி பாலிகா மற்றும் ஆனந்த பாலிகா பாடசாலைகளில் பிரதி அதிபராகவும், மேல் மாகாண கல்வித் திணைக்களத்தில் கல்வி அபிவிருத்திப் பிரிவில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும், நீர்கொழும்பு நியுஸ்டெட் மகளிர் வித்தியாலயத்தில் அதிபராகவும் கடமைகளை ஆற்றியுள்ளார். அத்துடன் இவர் கல்வி அமைச்சில்  ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பணிப்பாளராகவும் இருமொழிக் கல்வி பணிப்பாளராகவும் கல்வி அபிவிருத்திப் பணிப்பாளராகவும் கடமைகளை ஆற்றியுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தைப் பெற்றுள்ளதோடு, கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமாவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் அவுஸ்திரேலியாவின் வொல்லொங்கோங் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி பட்டத்தையும் பெற்றவராவார்

லேதிக செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கல்வி)

கலாநிதி கித்சிறி பிரசஞ்சித் மூணகம

கலாநிதி கித்சிறி பிரசஞ்சித் மூணகம அவர்கள் கல்வி அமைச்சில் மேலதிக செயலாளராக (தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கல்வி) கடமைகளை ஆற்றி வருகிறார். அவர் இலங்கை கல்வி நிருவாக சேவையின் 1 ஆம் தர உத்தியோகத்தராவார். விஞ்ஞான பாட ஆசிரியராக தமது சேவைகளை ஆரம்பித்த இவர் பின்னர் அதிபராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக ((கல்வி அபிவிருத்தி/ கல்வித் திட்டமிடல்/ ஆசிரிய கல்வி/ தொழில்நுட்பக் கல்வி), உதவிப் பரீட்சைகள் ஆணையாளராக (மதிப்பீடு - தாபனக் கல்வி) மற்றும் பணிப்பாளர் - தொழில்நுட்பக் கல்வி என பல பதவிகளையும் வகித்துள்ளார். அத்துடன் உதவிப் பொறியியலாளர் - தீ விபத்து அறிவிப்புக் கட்டமைப்பு - சவுதி ஆரம்கோ (Saudi Aramco) - சவுதி அரேபியா, தேசிய பயிற்றுவிப்பாளர் - பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆசிரிய மேம்பாடு, திறன் அபிவிருத்தி விசேட நிபுணர் -  தொழில்நுட்பக் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (TEDP - OFID) மற்றும் தேசிய STEAM கல்விச் செயலணியின் உறுப்பினர் மற்றும் இவ்விடயம் தொடர்பிலான கல்வி அமைச்சின் பிரதான உத்தியோகத்தராகவும் பணிகளை ஆற்றி வருகிறார்.

கலாநிதி கித்சிறி பிரசஞ்சித் மூணகம அவர்கள் சியனே தேசிய கல்வியியற் கல்லூரியின் விஞ்ஞான பிரிவில் தேசிய போதனாவியல் பட்டத்தைப் பெற்றுள்ளதோடு இவர் தமது இளமாணி பட்டத்தினை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டுள்ளார். அத்துடன், இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் கணிப்பீடு மற்றும் மதிப்பீடு பற்றிய டிப்ளோமாவையும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் இவர் அகில இலங்கை பாடசாலை ரோபோ மற்றும் புத்தாக்கப் போட்டிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியினுடாக அளிக்கப்படும் பாடசாலைப் புத்தாக்க ஆய்வுகூடம் பற்றிய எண்ணக்கரு மேம்பாட்டாளருமாவார். அத்துடன், இவர் இலங்கை சாரணர் சங்கத்தின் சின்னம் பெற்றவரும் என்பதுடன் கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட சாரணர் ஆணையாளருமாவார்.

Additional Secretary - Educational Service Establishment

ஐ.எம்.கே.பீ. இலங்கசிங்ஹ

சட்டத்தரணி, கலாநிதி திரு ஐ.எம்.கே.பீ. இலங்கசிங்ஹ அவர்கள் கல்வி அமைச்சில் மேலதிக செயலாளராக (கல்விச் சேவை நிறுவனம்) கடமைகளை ஆற்றுகின்றார். இவர் 1988 ஆம் ஆண்டில் இலங்கை கல்வி நிருவாகச் சேவைக்கு முதற்தடவையாக நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சைக்கு தோற்றி இணைத்துக்கொள்ளப்பட்ட குழுவின் உறுப்பினராவார்.  அத்துடன், 2015 ஜுன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் இலங்கை கல்வி நிருவாகச் சேவையின் விசேட தர உத்தியோகத்தராகவும் கடமைகளை ஆற்றுகின்றார். மேலும், இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் லுதினன் கேனல் ஒருவராக, உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக மற்றும் கல்வி பற்றியதாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ள ஓர் உத்தியோகத்தராவார். இவர் நாட்டில் பிரபலமான பல பாடசாலைகளில் அதிபராக, வலயக் கல்வி அலுவலகங்களில் உதவிக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்வி அலுவலகங்களில் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சில் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளில் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். மேலும், தேசிய கல்வி நிறுவகத்தில் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆசிரிய கல்வி மற்றும் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகவும், கல்வித் தலைமைத்துவ அபிவிருத்தி நிறுவனம் மீபே நிலையத்திலும் கடமைகளை ஆற்றியுள்ளதோடு கல்வி வெளியீட்டு ஆணையாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதலாவது பட்டத்தினைப் பெற்றுள்ள திரு இலங்கசிங்ஹ அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, பட்டப்பின் கல்வி முதுமாணி, பட்டப்பின் கல்வி தத்துவமாணி மற்றும் அதே பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் தத்துவவியல் முதுமாணி ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார். அத்துடன் ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தில் கல்வி முகாமைத்துவம் பற்றிய பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும், மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தினையும்  இலங்கை சட்டக் கல்லூரியின் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்நீதிமன்ற சட்டத்தரணியாகவும் நொத்தாரிஸ் மற்றும் சத்தியப்பிரமாணத்திற்கான ஆணையாளராகவும் பணிகளை மேற்கொள்கின்றார். பெறுகைச் செயற்பாடு மற்றும் இருப்புப் பொருள் சுற்றாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், இலங்கை கல்வி நிருவாக சேவை, ஆசிரியர் கல்வியியலாளர் சேவை, அதிபர் சேவை மற்றும் அதன் ஆரம்பம் மற்றும் வளர்ச்சி, அடிப்படை புலனாய்வு செயற்பாடுகளை மேற்கொள்ளல், முறையான ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் சாட்சிகளை வழிநடாத்துதல் ஆகிய தலைப்புக்களின் கீழ் 04 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ள ஓர் உத்தியோகத்தராவார்.

Additional Secretary - Educational Quality Development

திருமதி கயாத்ரி அபேகுணசேகர

திருமதி காயத்ரி அபேகுணசேகர அவர்கள் கல்வி அமைச்சில் மேலதிக செயலாளராக (கல்விப் பண்புசார் விருத்தி) 2023 மே மாதம் 29 ஆம் திகதி முதல் தமது பணிகளை ஆரம்பித்துள்ளதுடன், இவர் சுமார் 35 வருடகால சேவை அனுபவத்தைக் கொண்ட கல்வி நிருவாக சேவையின் 1 ஆம் தர உத்தியோகத்தராவார். நு/ நில்தண்டாஹின்ன ஸ்ரீ சுமங்கல மத்திய மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும், வலப்பனை கோட்டக் கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும், கல்வி அமைச்சின் சமய மற்றும் விழுமியக் கிளையில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும், சுமார் 31 வருட காலம் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தில் உதவிப் பரீட்சைகள் ஆணையாளராக (ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி), பிரதிப் பரீட்சைகள் ஆணையாளராக (ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி), பரீட்சைகள் ஆணையாளராக (நிருவாகம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி) கடமைகளை ஆற்றியுள்ளார்.

மேலும் களனிப் பல்கலைக்கழகத்தில் வணிக விஞ்ஞானம் (விசேட) பட்டத்தைப் பெற்றுள்ள இவர், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வி மதிப்பீடு மற்றும் கணிப்பீட்டு முறைமை பற்றிய பட்டப்பின் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

Additional Secretary - School Affairs

Mrs. Nilamani Malaviarachchi

Additional Secretary - Administration

Mrs. H. Nilakshi N Gunasekara

Additional Secretary - Discipline and Investigation

திரு. பி.எல். பத்மகுமார

திரு. பி.எல். பத்மகுமார அவர்கள் கல்வி அமைச்சில் மேலதிக செயலாளராக (நிருவாகம்) பணியாற்றுகிறார். நிருவாக மற்றும் அபிவிருத்தித் துறையில் 20 வருட அனுபவத்தைக் கொண்டுள்ள இவர் இலங்கை நிருவாக சேவையின் (SLAS) விசேட தரத்திற்கான உத்தியோகத்தவராவார். இவர் 2000 ஆம் ஆண்டு அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தில் உதப் பிரதேச செயலாளராக அரச நிருவாக சேவையில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளார். அப்போது முதல் இவர் பிரதேச, திணைக்கள மற்றும் அமைச்சு மட்டங்களில் உதவிப் பிரதேச செயலாளர், உதவிப் பணிப்பாளர், உதவிக் கட்டுப்பாட்டாளர், பிரதிக் கட்டுப்பாட்டாளர், சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் பணிப்பாளர் என பல்வேறு பதவிநிலைகளின் கீழ் தமது சேவையை ஆற்றியுள்ளார்.

 

திரு. பி.எல். பத்மகுமார அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலைமாணி (சமூக விஞ்ஞானம்) பட்டதாரி என்பதுடன் களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி (சமூக விஞ்ஞானம்) பட்டத்தையும் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தில் (SLIDA) அரச நிருவாகம் பற்றிய டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

 

மேலதிக செயலாளர் - தாபனம்

திரு. ஏ.ஜே.எஸ்.எஸ். எதிரிசூரிய அவர்கள்

திரு. ஏ.ஜே.எஸ்.எஸ். எதிரிசூரிய அவர்கள் கல்வி அமைச்சில் மேலதிக செயலாளராக (தாபனம்) பணிகளை ஆற்றுகின்றார். அரச சேவையில் 30 வருடகால அனுபவத்தைக் கொண்டுள்ள திரு. எதிரிசூரிய அவர்கள் நிர்வாக சேவை உத்தியோகத்தராக 23 வருடகால அனுபவத்தையும் திறமைகளையும் கொண்ட இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்தினையுடைய ஓர் உத்தியோகத்தராவார். தென் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளராக தமது பணிகளை ஆரம்பித்த இவர் பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே உதவிப் பிரதேச செயலாளராக பணிகளைத் தொடர்ந்துள்ளார். முதலாம் தரத்திற்கான உத்தியோகத்தராக மஹரகம பிரதேச செயலாளர், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தில் பணிப்பாளராகவும் கடமைகளை மேற்கொண்டுள்ள அதேவேளை, விசேட தரத்திற்கான உத்தியோகத்தராக மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் மேலதிக செயலாளராகவும் கல்வி அபிவிருத்தி திணைக்களத்தில் பணிப்பாளர் நாயகமாகவும் சேவைகளை ஆற்றியுள்ளார்.

எதிரிசூரிய அவர்கள் களனிப் பல்கலைக்கழகத்தின் கலைப் பட்டதாரி என்பதுடன் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தைப் பயின்று உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகவும் தொழில் தகைமையைப் பெற்றுள்ளார். மேலும் இவர் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தில் பொது நிருவாகம் பற்றிய பட்டப்பின் பட்டத்தையும் பெற்றவராவார்.

Additional Secretary - Procurement & Construction

திருமதி தேவிகா லியனகே

இவர் சியனே கல்வியியற் கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்து கணித பாட ஆசிரியராக 05 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.

2000 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்துகொண்டதன் பின்னர் கீழ்வரும் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

உதவிக் கட்டுப்பாட்டாளர் (வழங்கல்)                      - உணவுத் திணைக்களம்

உதவிச் செயலாளர் (ஒழுக்காற்று)                              - அரச சேவைகள் ஆணைக்குழு

பிரதிக் கட்டுப்பாட்டாளர்                                                       - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

பணிப்பாளர் (நிருவாகம்)                                                      - வணிக மற்றும் கப்பற்றுறைச் செயலகம்

சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பாதுகாப்பு)          - பாதுகாப்பு அமைச்சு

பணிப்பாளர் (நிறுவன மற்றும் ஒழுக்காற்று)   - தேசிய பொலிஸச ஆணைக்குழு

மேலதிக செயலாளர் (நிர்வாகம்)                                  - காணி முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு

மேலதிக செயலாளர் (கருத்திட்டம்)                             - காணி அமைச்சு

 

Additional Secretary - Non Academic & Combined Services

திருமதி ஆர்.பீ கன்கெவல

திருமதி ஆர்.​பீ. கன்கெவல அவர்கள் கல்வி அமைச்சில் மேலதிக செயலாளராக (கல்விசாரா மற்றும் ஒன்றிணைந்த சேவை) பணியாற்றுகிறார். நிருவாக மற்றும் அபிவிருத்தித் துறைகளில் 20 வருட கால அனுபவத்தைக் கொண்ட இவர் இலங்கை நிருவாக சேவையின் (SLAS) விசேட தரத்திற்கான உத்தியோகத்தவராவார். சுகாதார அமைச்சில் பணிப்பாளராக தனது கடமைகளை ஆரம்பித்த அதேவேளை பின்னர் கல்வி அமைச்சில் உதவிச் செயலாளராகவும் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் பணிகளை ஆற்றியுள்ளார். இவர், முதலாம் தரத்தின் உத்தியோகத்தராக நிதி அமைச்சிலும்  இலங்கை சுங்கத்திலும் சேவையாற்றியுள்ள அதேவேளை, விசேட தரத்தின் உத்தியோகத்தராக ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சிலும் சூரிய, காற்று மற்றும் நீர்மின் உற்பத்திக் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சிலும் பணியாற்றியுள்ளார்.

திருமதி கன்கெவல அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரசாயன விஞ்ஞானம் பற்றிய விசேட பட்டத்தினையும் கொண்ட விஞ்ஞானமாணி பட்டதாரியுமாவார். மேலும் இவர் களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி பட்டத்தினையும் பெற்றுள்ள அதேவேளை, இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தில் அரச நிருவாகம் பற்றிய டிப்ளோமாவையும் பெற்றவராவார்.

பணிபபாளர் நாயகம் - கணக்கு மற்றும் நிதி

டீ. எல். ஏ. விஜேநாயக்க

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் தொடர்பான பட்டப்பின் பட்ட நிறுவனத்தின் அரச நிர்வாகம் தொடர்பான பட்டப்பின் பட்டமும்,(e-Government),பேராதனை பல்கலைக்கழக்த்தின் கணக்கியல் மற்றும் நிதி தொடர்பான பட்டப்பின் பட்ட டிப்ளோமாவும், கணக்கியல் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமாவும், தனிநபர் நிதி முகாமைத்துவ டிப்ளோமாவும், தகவல் தொழில்நுட்ப டிப்ளோமாவும், (e-Government), பட்டய கணக்காளர் CompTia A+, (இறுதி) மற்றும் கணக்கியல் நிபுணர்களின் சங்கத்தின் முழு உறுப்பினர் பதவியும் அவரை சார்ந்ததாகும்.

அரச நிதி முகாமைத்துவம், பெறுகை முகாமைத்துவம், திட்ட நிதி, (e-Government),   சேவைகள் தொடர்பில் ஆர்வம் காட்டுவதோடு, ஐக்கிய இராச்சியம், மலேசியா,தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் அனுபவத்தினை கொண்டவராவார்.

TOP