பாடசாலை செயற்பாடுகள்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

பிள்ளைகளிடையே சமூக ஒற்றுமையையும் மீள்ஒருங்கிணைவையும் ஊக்குவிக்கும் பொதுக் கல்வி முறைமை

பணிக்கூற்று

கல்வியின் ஊடாக சமூக ஒற்றுமையையும் மீள்ஒருங்கிணைவையும் ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்ட ஒத்துநிகழச் செய்யும் மைல்கற்களை கையளிப்பதற்காக கல்விக் கொள்கை வகுப்பாளருக்கும் திட்டமிடுபவருக்கும் பாடசாலைகளுக்கும் ஒருங்கிணைவு செய்தல்

பிரதான பணிகள்

வடக்கு மற்றும் மாகாண மட்டங்களில் ஆசிரிய கல்வியியலாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் சேவைகால ஆலோசகர்களை நுண்ணறிவாளராக்கல்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

நாட்டின் அறிவு அடிப்படையிலான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி தமிழ் பாடசாலைகளுக்கும் வழங்கப்படுதலை உறுதிசெய்தல்

பணிக்கூற்று

தமிழ்ப் பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் சேவை வழங்கலை உறுதிப்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடசாலைகள் அபிவிருத்தி அலகை இயக்குதல் மற்றும் ஏனைய இயக்கங்கள் / நிறுவனங்களுடன் ஒருங்கிணைதல்

பிரதான பணிகள்

கிளையின் பணிகள்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

இலங்கையர் அடையாளத்தை பேணும் அதேவேளை, துறையில் தொழில்சார் அபிவிருத்தி பயன்களில் இருந்து சகல உரிய பொருத்தமான பன்னாட்டு கல்வி செயன்முறைகளை உள்வாங்கி பன்னாட்டுச் சமூகத்தில் அறிவாண்மையாளராதல்

பணிக்கூற்று

நவீனப்படுத்தப்பட்ட பன்னாட்டுக் கல்வி ஊடாக, வெளிநாட்டு செயற்றிட்டங்களின் அடிப்படையிலான அபிவிருத்திக்கு, பொதுக் கல்வி முறைமையின் உயர்தொழில் ஆற்றுபவர்களை குவிமுனைப்படுத்தி, முழுதுந் தழுவிய உயர்தொழில் அபிவிருத்தியுடன் பன்னாட்டு தகைமை பெற்ற குடிமக்களை உருவாக்கல்

கிளையின் பணிகள்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

முஸ்லிம் சமய பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட மாணவர்களின் தகைமைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் முழுதுந் தழுவிய கல்விக் குறிக்கோளை அடைவதற்கு பங்களிப்பு செய்தல்

பணிக்கூற்று

எதிர்கால தலைமுறைக்காக, தரமான கல்வி அபிவிருத்தி ஊடாக தற்போதுள்ள மாணவர் சமூகத்தின் அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கின் தகைமையை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு முஸ்லிம் சமூகத்தைப் பங்களிப்புச் செய்தல்

கிளையின் பணிகள்

முஸ்லிம் நாட்காட்டியைத் தயாரித்தல் / முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி முகாமைத்துவ தகவல்களை இற்றைப்படுத்தல்

முஸ்லிம் பாடசாலைகளுக்கு கற்பித்தல் - கற்றல் கருவிகளை வழங்கல் / வசதியற்ற முஸ்லிம் பாடசாலைகளை மேம்படுத்தல்

முஸ்லிம் பாடசாலை அதிபர்களின் வினைத்திறனான முகாமைத்துவம் ஊடாக திறன்களை அதிகரித்தல்

முஸ்லிம் பாடசாலைகளில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை (மீலாத-உன்-நபி) கொண்டாடுதல்

பாடசாலை மாணவர்கள் மத்தியில் அரபு மொழியை ஊக்குவிக்க செயற்பாடுகளை ஏற்பாடு செய்தல்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

மிகச் சிறந்த மட்டத்தில் கல்வி அமைச்சின் குறிக்கோளை அடைய மனித வளத்தின் தகைமைக் கொள்திறனை அதிகரிக்கச் செய்தல்

பணிக்கூற்று

மனித வள முகாமைத்துவம், நன்கு திட்டமிடப்பட்ட மனித வள அபிவிருத்திக் கொள்கை என்பவற்றில் வழிகாட்டல் நெறிமுறையை நிறுவுதல், ஆய்வுகளை நடாத்தல், தற்போதுள்ள மனித வளங்களின் தகைமைகளின் ஏற்றத்தாழ்வை கவனத்தில் எடுத்து உண்ணாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி வழங்கி கல்வி முறைமையில் இருக்கும் அலுவலர்கள், அதிபர்கள் உட்பட்ட மனித வளங்களின் தகைமைக் கொள்திறனை அதிகரிப்பதற்கு திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல்

கிளையின் பணிகள்

கல்வி அமைச்சுக்கு மனித வள அபிவிருத்தி திட்டத்தைத் தயாரித்தல்

உண்ணாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சி வேலைத் திட்டங்களை மேற்கொள்ளல்

பயிற்சி வேலைத் திட்டங்களின் பின்னூட்டலை பகுப்பாய்வு செய்தல்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

அறிவு, திறன், மனப்பாங்கில் மாணவர் சமூகத்தை சமூகமயமாக்கும் தரக் கல்விக்கு இட்டுச் செல்லும் கல்வி முறைமையைச் செயற்படுத்தல்

பணிக்கூற்று

பிரபல நகரப் பாடசாலைகளுக்கு வரையறுக்கப்பட்ட வளங்களை சிறுதொகை மாணவர் கொண்ட பாடசாலைகளுக்கு வழங்கி அவற்றை அபிவிருத்தி செய்து நகர பாடசாலைக்கு தற்போது நிலவும் போட்டியை / தேவையைக் குறைத்தல். மேலும் பாடசாலையை விட்டு விலகுதல் மற்றும் பாடசாலைகளுக்கு இடையேயான முரண்பாடுகளைக் குறைத்தல்

கிளையின் பணிகள்

முன்னுரிமை அடிப்படையில் கட்டிடங்கள், வேலிகள், எல்லைகள் என்பவற்றை கட்டுமானம் செய்தலும் பராமரித்தலும்

சம்பள வசதிகளை வழங்கல்

பொருட்களையும் கருவிகளையும் (அழகியல், தொழினுட்பம் மற்றும் கட்புல-செவிப்புலக் கருவிகள்).

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

உடல்நலத்துடன், சமூகமயமான மெய்வல்லுநரான, சமநிலையான ஆளுமை கொண்ட மனிதரை உருவாக்கல்

பணிக்கூற்று

மாற்றமடையும் போக்குகளை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளும் ஒழுக்க விழுமியத்துடன் வாழக்கூடிய உடநலமும் வினைத்திறனும் உள்ள இலங்கையரை உருவாக்கல்

கிளையின் பணிகள்

கோட்ட, வலய மற்றும் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் இடங்களை வெற்றிகொள்ளும் மாணவர்கள் அகில இலங்கை மட்டத்தினை அடைவதற்கு வாய்ப்புகள் வழங்குவதற்காக தேசிய பாடசாலை விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்தல்

20 விளையாட்டுப் பாடசாலைகளை கண்காணித்தலும் ஒருங்கிணைத்தலும்

வெளிநாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கல்

விளையாட்டு ஆசிரியர்களின் அறிவை இற்றைப்படுத்த பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்தல்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

உலகுக்கு சுயமதிப்பு மற்றும் இலங்கையர் அடையாளம் கொண்ட பிள்ளைகளை உருவாக்கல்

பணிக்கூற்று

மாணவர்களின் ஆற்றலாண்மையை அடையாளம் காண்பதன் ஊடாக அவர்களின் திறன்களை அபிவிருத்திசெய்து திட்பமான ஆளுமையுடையவர்களாக வழிநடாத்தல்

கிளையின் பணிகள்

சாரணர் இயக்கம், சாரணீயர் இயக்கம், மாணவர் படை (Boys Scout, Girl guide, Cadet) முதலான இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளை பாடசாலையில் ஊக்குவித்தல்.

பாடசாலை முறைமையில் மதுபானம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தவிர்க்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்.

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

பாடசாலைகளின் தரம் மற்றும் உட்கட்டமைப்பை முன்னேற்றல்

பணிக்கூற்று

அளவு மற்றும் தர அடிப்படையில் பெருந்தோட்டங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி அபிவிருத்தி செய்தல் மற்றும் சமத்துவ நிலையில் இந்த பாடசாலைகளை முறைமைக்குள் ஒன்றிணைத்தல்

கிளையின் பணிகள்

பெருந்தோட்ட பாடசாலைகளில் ஆரம்ப மட்ட மாணவரின் கல்வியை முன்னேற்றுவதற்காக மாணவர் அடிப்படை மற்றும் ஆசிரியர் அடிப்படை வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்

5ம் தர புபைபரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்கு வலய மற்றும் மாகாண மட்ட செயலமர்வுகளை நடாத்தல்

இடைநிலைக் கல்வி தர அபிவிருத்திக்காக - பெருந்தோட்டப் பாடசாலை அதிபர்கள், கல்வி அலுவலர்கள் மற்றும் சேவைக்கால ஆலோசகர்களின் கொள்திறனைக் கட்டியெழுப்புவதற்கு மாகாண மட்டத்தில் பாடசாலை அடிப்படையிலான ஆசிரியர் அபிவிருத்தி செயலமர்வுகளை நடாத்தல்

க.பொ.த. (சா.த.) மற்றும் (உ.த.) பரீட்சைப் பெறுபேறுகளை மேம்படுத்த வலய மற்றும் மாகாண மட்ட செயலமர்வுகளை நடாத்தல்

பெருந்தோட்டப் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்திக்காக கல்வி அமைச்சின் ஏனைய கிளைகளுடன் (ஆரம்ப, விஞ்ஞான, கணித கிளைகள் மற்றும் கல்விக் கல்லூரிகள்) ஒருங்கிணைவு செய்தல்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

பேண்தகு அபிவிருத்தியுடனான ஆரம்பக்கல்வி

பணிக்கூற்று

மகிழ்ச்சியான கற்றல் சூழலினை உருவாக்கி ஆரம்ப கல்வி மாணவர்களுடைய சுய கற்றல், சுயமதிப்பு, சுயமாக முன்வந்து செயற்படும் புத்தாக்கதன்மை மிக்க சிறந்த தொடர்பாடலினை மேற்கொள்ள கூடிய திறனை விருத்தி செய்தல்

நோக்குகள்

ஆரம்ப கல்வியினுடைய முழுமொத்த இலக்குகள்


- குழந்தையினுடைய ஆளுமையினை விருத்தி செய்வதற்கு சிறந்த அடித்தளத்தினை இடுதல்

- இரண்டாம் நிலைக்கல்வியை தொடர்வதற்குரிய அடிப்படை தேர்ச்சிகளை விருத்தி செய்தல்

உப நோக்குகள்

5-10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுடைய முழு மொத்த ஆரம்ப கல்விக்கற்றலினை உறுதிப்படுத்துவதற்காக

ஆரம்ப கல்வியினை மாணவர்கள் 100% பூரணப்படுத்துவதற்கான உயர்மட்ட அத்தியவசியமான கற்றல் தேர்ச்சி அடைவதனை உறுதிப்படுத்துவதற்காக

ஆரம்ப கல்வி மாணவர்கள் 80% மான விருப்பத்திற்குரிய உயர்மட்ட கற்றல் தேர்ச்சிகளை பூரணப்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக

அனைத்து ஆரம்ப கல்வி பாடசாலைகளுக்குமான உட்கட்டமைப்பு வசதிகளை தேசிய நெறிமுறைகளுக்கமைவாக நடைமுறைப்படுத்தபடுவதை உறுதிசெய்வதற்காக

பிரதான செயற்பாடுகள்

ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான பிள்ளை நேயப்பாடசாலை சட்டகத்தை அறிமுகம் செய்தல்(CFS)

வினைத்திறனான பங்குபற்றுதலுடன் பாடசாலை சமூகத்தினுடை்ய பாடசாலை சுயமதிப்பீடும் தயாரித்தலும் , பாடசாலை அபிவிருத்தித்திட்டங்களை நடைமுறைப்படுத்தலும் மேற்பார்வை செய்தலும் , அறிமுகப்படுத்தலும்

ஆரம்பகல்வியில் இணைப்பாடவிதான செயற்பாடுகளை அறிமுகம் செய்தல்

கண்காணிப்பு மற்றும் மதிப்பிடல் சட்டகத்தின் அடிப்படையில் பிள்ளை நேயப்பாடசாலை சட்டகத்தை அறிமுகஞ்செய்தல்

தேசிய பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளிற்கான தர உள்ளீடுகளினை வழங்குதல்

தேசிய பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கணித உபகரணங்களை வழங்குதல்

தேசிய பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான தளபாடங்களை வழங்குதல்

தேசிய பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான அ்த்தியவசியமான உபகரணங்களையும் கட்டடங்களையும் வழங்குதல்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

நன்னடத்தை பண்பும் தார்மீகப்பொறுப்புமுடைய சுதந்திர மன நிலையுடன் செயற்படக்கூடிய பிரஜைகளை உருவாக்கல்

பணிக்கூற்று

முறையான கல்வி முறையிலிருந்து விலகியோருக்கும் விசேட தேவையுடையோரினதும் தேசிய , சர்வதேச தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நாட்டுப்பிரஜைகளானஅனைத்து மாணவர்களினதும், வளந்தோரினதும் திறன் மட்டங்களினை அதிகரிப்பதற்கு கல்விசார் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்

கிளையின் பணிகள்

பாடசாலை செல்லும் வயதையுடைய, வளந்தவருக்குமான கல்வியினை வழங்குதல்

விசேட தேவை மாணவர்களுடைய வசதி வாய்ப்புக்களை திட்மிடல்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

உலகின் எதிர்கால சவால்களிற்கு முகங்கொடுக்ககூடிய நாட்டின் தேவைகளுக்கு பொருத்தமான தகுதியான கற்றல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதனூடாக பிரஜைகளை தாயார் செய்தல்

பணிக்கூற்று

தேர்ச்சிமட்ட கற்பித்தல் செயன்முறையை இலக்காக கொண்டு அவர்களது திறன்களை விருத்தி செய்வதனுடாக மாணவர்களிடமிருக்கும் உள்ளார்ந்த திறன்களை விருத்தி செய்து முயற்சியாளர்களாக மாற்றுதல்

கிளையின் பணிகள்

புத்தாக்க சிந்தனை, தொழில்நுட்ப, சிற்பவேலை, மனைப்பொருளியல், செய்முறைதொழில்நுட்பதிறன்மிக்க விடயங்களை இணைப்பு செய்து பாடத்தினுடைய பொருத்தமான செயற்பாடுகளில் உள்வாங்கி பாடத்தினை விருத்தி செய்தல்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

தகுதிவாய்ந்த கற்றல் கலாச்சாரத்துடன் நாட்டினுடைய தேவைக்கு பொருத்தமான விவசாயக்கல்வி மூலமான பேண்தகு விவசாய அபிவிருத்தியினை சூழலின் பாதுகாப்புடன் விருத்தி செய்தல்

பணிக்கூற்று

விவசாயத்துறைக்கேற்ப உன்னத மனோ நிலையுடனான திறன்மிக்க முயற்சியாளர்களை மாணவர்களிடமுள்ள உள்ளார்ந்த திறன்களை விருத்தி செய்வதன் மூலம் உருவாக்குதல்

கிளையின் பணிகள்

G.C.E. (A/L) தரத்தில் புதிதாக அறிமுகங்செய்யப்பட்ட உயிர்முறைமைகள் தொழில்நுட்ப பாடத்தில் பாடத்தில் மாற்றங்களை உருவாக்குவதற்காக தேசிய கல்வி நிறுவகத்திற்கு தேவையான சிபாரிசுகளையும் பங்களிப்பினையும் வழங்குதல்

விவசாய பாடத்திற்கு தகமைச்சுட்டிகளையும் நியமங்களினையும் வழங்க தீர்மானித்தல்

விவசாய கல்வி அலவலர்களதும் விசாய பாட ஆசிரிய ஆலோசகர்களதும் விவசாய பாட ஆசிரியர்களுக்குமான பயிற்சி தேவைபாடுகளுக்குமான இயலுமை விருத்தி செயற்பாடுகளையும் ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்தல்

மாகாண, தேசிய மட்டங்களில் விவசாய போட்டிகள் , கண்காட்சிகளை செயற்படுத்துதல்


- தமிழ் சிங்கள புது வருட காலப்பகுதியில் பயன்தரு பழமர விதைகளை நாட்டுதல்

- ” பசுமை“ பாடசாலை நிகழ்ச்சித்திட்டம்

- ஒரு பாதுகாப்பான சிறந்த சூழலை ஏற்படுத்துவதற்கான தரவுப்பகுப்பாய்வும் அவதானிப்பும் (பூகோள சூழல்கல்வி நிகழ்ச்சித்திட்டம்)

- “பூமியை பாதுகாப்போம்” செயற்றிட்டத்தை ஒழுங்கமைத்தலும் நடைமுறைப்படுத்தலும்

- சூழலியலாளர்களின் செயற்றிட்டத்தினை இணைப்புச்செய்தல்

- சூழலுக்கு பொருத்தமான விசேட மாணவர் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தல்

பார்வை மற்றும் பணி, இலக்கு

தூரநோக்கு

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு தரமான புத்தகங்களை மட்டுமே வாசிப்பதற்கு ஊக்குவிப்பதற்கான வழிகாட்டல்.

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு என்பதாக பாடசாலை நூலகங்களை நோக்கி வரும் புத்தகங்களின் பண்புத் தரத்தையூம் ஒழுக்கலாற்றினையூம் பரிசீலனை செய்தல் மற்றும் நாட்டின் அடையாளத்தை பாதுகாப்பது தொடர்பாக பொருத்தமான புத்தகங்களை தெரிவூ செய்தல்.

இலக்கு

பண்புத்தரத்துடன் கூடிய புத்தகங்களுக்கு பாடசாலை புத்தகமாக அனுமதி வழங்க வேண்டும் என 1952 பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சுயமொழி;இ இரு மொழி; மற்றும் ஆங்கில பாடசாலைகள் தொடர்பான பிரமாணக்குறிப்பின் 19 ஏ உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகளை அமுல்படுத்தல் மற்றும் செயலாளருக்காக பரிந்துரைகளை முன்வைத்தல்.

கிளையின் பணிகள்

பண்புத்தரத்துடன் கூடிய புத்தகங்களை இனங்காணுதல்.

பாடசாலை நூலக புத்தகமாக கல்வி அமைச்சின் அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வெளியீட்டு நிறுவனங்களை அறிவூறுத்தல்.

கல்வி; மதிப்பாய்வாளர்களை அறிவூ+ட்டும் செயலமர்வூகளை நடாத்துதல்.

கல்வி வெளியீட்டு ஆலோசனை சபை கூட்டங்களை நடாத்துதல்.

கல்வி மதிப்பீட்டாய்வாளர்கள் ஃ வெளியீட்டாளர்கள் ஃ எழுத்தாளர்கள் ஃ பாடசாலை அதிபர்கள் ஃ பாடசாலை மாணவர்கள் அறிவூ+ட்டும் செயலமர்வூகளை ஓழுங்கு செய்தல்.

புத்தக மதிப்பீட்டு தொடர்பாக பொருத்தமான மதிப்பீட்டாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக சிங்களஇ தமிழ்இ மற்றும் ஆங்கில மொழி மூல பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுதல்.

கல்வி வெளியீட்டு ஆலோசனை சபைக்கு முன்னிலைப்படுத்தப்படும் கையெழுத்துப் பிரதிகளை பொருத்தமான மதிப்பீட்டாளர்களுக்கு அனுப்புதல் மற்றும் மதிப்பீட்டாளர்களை இனங்காணுதல்.

மாதாந்த கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் புத்தகங்களை அனுமதித்தல் ஃ நிராகரித்தல் ஃ திருத்தங்களை சுட்டிக்காட்டுதல்.

விசேட பணிகள் குறித்து சபைக்கு பரிந்துரைகளை சமர்ப்பித்தல் மற்றும் உரித்தாகும் ஏனைய தீர்மானங்களை மேற்கொள்ளுதல்.

நூலக அனுமதி பத்திரம்; தொடர்பாக கல்வி செயலாளருக்காக அனுமதித்தல் மற்றும் ஒப்பமிடுதல்.

அரசாங்கத்தின் பாதியை மாத்திரம் அறவிடுதல் செய்து அனுமதி வழங்க வேண்டிய புத்தகங்களை இனங்காணுதல் மற்றம் அவற்றுக்கான அனுமதி பத்திரங்கள் வழங்குதல் தொடர்பாக சபைக்கு விடயங்களை முன்வைத்தல்.

TOP