
இந்நாட்டின் கல்வி துறையில் பிரிவெனா கல்விக்கு விசேட முன்னுரிமை வழங்கப்படுகின்றது. பிரிவெனா கல்வி தொடர்பான நாட்டின் அவதானம் அரசாங்கத்திற்கு அரசாங்கம் அமைச்சருக்கு அமைச்சர் மாற்றம் கொள்வதனை நிறுத்த வேண்டும். பிரிவெனா துறையின் பதவிகள் ஸ்திரத்துவம் வாய்ந்ததாக இருக்கும் வகையில் அதன் நிர்வாக கட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
பிரிவெனா துறைக்கான புதிய பரிவேனாசார்ய நியமனம் வழங்கும் பிரதான நிகழ்வு நேற்று (01) பத்தரமுல்லையில் அமைந்தள்ள இசுருபாய, கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுவரை காலம் பரிவேனாசார்ய நியமனம் வழங்க முடியாத நிலைமை காணப்பட்டது. இது தொடர்பாக கல்வி அமைச்சரின் அவதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன்படி ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பிரகாரம் மிகவும் குறுகிய காலத்திற்குள் புதிதாக பரிவெனாசார்ய நியமனங்கள் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த நிகழ்வின் போது கல்வி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
இந்நாட்டிலும் சர்வதேச அளவிலும் உள்ள சிங்களவர்கள் அல்லாத பௌத்தர்களுக்காக இந்நாட்டின் பிரிவெனா கல்விக்கு பாரிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அத்துடன் பௌத்;த தர்மத்தின் செய்தியை சர்வதேசத்தவர்களுக்கு எடுத்து கூறும் பொறுப்பும் பிரிவெனா கல்வி துறைக்கு உள்ளது என்றார்.