- கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த
பரீட்சைகளை நடாத்துதல், பெறுபேறுகளை வெளியிடுதல், பாடப்
புத்தகங்களை விநியோகித்தல், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை
அனுமதித்தல் போன்ற உரிய காலத்திற்கு இடம்பெறவேண்டிய
கல்வித்துறையின் செயற்பாடுகளை எதிர்வரும் டிசெம்பர் மாதமளவில்
மீளமைக்கப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில்
பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். இன்றைய தினம் (25) கல்விச்
செயலாளராக எம். நிஹால் ரணசிங்க அவர்கள் தமது கடமைகளைப்
பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் இணைந்துகொண்ட போதே அமைச்சர்
இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர், இவ்வாறான இக்கட்டான
பொருளாதார சூழ்நிலையில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதுடன்
பிரிவேனா பிரிவின் பணிகளை மீளமைப்பதும் மிகவும் முறையாகவும்
துரிதமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
ஒரு நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு முறையான முறையில்
கட்டமைக்கப்படுவதாகவும், அதிலிருந்து விலகும் போது, துணை
விளைவுகள் ஏற்படுவதாகவும், அதற்கேற்ப கல்வி அமைச்சுக்குள் உள்ள
முறையான நடைமுறைகளுக்கு ஏற்ப, அந்த நிர்வாக முறையை முறையாக