உயர் தர பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திங்கட்கிழமை முதல்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் ஞாயிற்றுக் கிழமை….
2020 ஆம் ஆண்டின் கல்வி பொது தராதர பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திங்கள் முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடாத்துவதற்கும்இ ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் ஞாயிறு அன்று நடாத்துவதற்கும் கல்வி அமைச்சு தீரமானித்துள்ளது..
கொவிட் 19 தொற்று பரவலினால் 2020 க.பொ.த. (உஃதர) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இழக்க நேரிட்ட கற்றல் காலத்தை தழுவூம் முகமாக பரீட்சைக்கு நியாயமான காலத்தை பெற்றத் தருமாறு அதிகமான கோரிக்கைகள் கல்வி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றதுடன்இ இந்த கோரிக்கை தொடர்பாக கல்வி அமைச்சினால்; விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதன் பிரகாரம் க.பொ.த. (உஃதர)த்திற்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் உயர் தர கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களை இணைத்துக்கொண்டு நாடாளாவிய ரீதியில் கணக்கெடுப்பொன்றும் மேற்கொள்ளப்பட்டது. .
அத்துடன் இந்த சவால் நிறைந்த காலத்தில் பரீட்சை தொடர்பாக நாட்களை தீர்மானிக்கும்போது சிறுவர்கள் தரப்பில் மிகவூம் நியாயமான முறையில் செயற்பட வேண்டும் என அதிமேதகு சனாதிபதி போலவே கல்வி அமைச்சரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்விச் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த அவர்கள் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்
கடந்த கஷ்ட காலங்களில் வீடுகளில் அடைப்பட்டு கிடந்த பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தவறாமல் முன்னெடுத்துச் செலவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்பு வழங்கிய நாட்டின் அனைத்து ஆசிரியர்களுக்கும்இ தாம் இழந்த பாடசாலை காலத்தை வீட்டில் இருந்த வண்ணம் விளைத்திறனுடன் கல்வி நடவடிக்கைகளில் இருந்து மீராமல் மேற்கொண்ட சிறார்களுக்கும் கல்வி திட்டங்களை முன்னெடுத்து கற்றல் செயற்பாடுகளுக்கு துணையாக நின்ற தொலைகாட்சிஇ வானொலிஇ பத்திரிகை உள்டங்கிய சமூக வலைத்தளங்கள் உட்பட அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் கல்வி அமைச்சர் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்
பாடசாலைகள் நடாத்தப்படும் நாட்கள் மற்றும்; பரீட்சைகள் இடம்பெறும் நாட்களில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி திருத்தங்களுக்கு அமைய நாட்டின் அனைத்து பாடசாலைகள் தொடர்பாக இரண்டாம் தவனை விடுமுறை ஒக்டோபர 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 14 ஆம் திகதியூடன் முடிவடைவதுடன்இ மூன்றாவது பாடசாலை காலம் நவம்பர் 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என கல்விச் செயலாளர் மேலும் தெரிவித்தார்
அத்துடன் ஒரு நாடு என்ற வகையில் பொதுவாக நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைலையின் தீவிரத்தை நன்கு புரிந்து கொண்டு நீண்ட நாட்களாக பாடசாலைகள் மூட்ப்பட்டதின் காரணத்தால் கற்றல் நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாக்கத்தையூம் சவாலாக ஏற்றுக்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அனைத்து மாணவர் சமூகத்திடம் கேட்டுக்கொள்கின்றது.
இந்த விசேட ஊடக சந்திப்புக்காக கல்வி இராஜாங்க செயலாளர் ரஞ்சித் சந்திரசேக்கரஇ பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த அவர்களுடன் மேலும் பலர் கலந்து கொண்டார்கள்