2020 ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலைச் சீருடை பரிசுப் படிவங்களின் செல்லுபடியாகும் காலம் 2021-02-28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய கொவிட் சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை, நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தமை போன்ற காரணங்களால் மாணவர்களது பரிசுப் படிவங்களுக்குரிய சீருடைகளை கொள்வனவு செய்துகொள்ள முடியாமல் போயுள்ளது எனக் கிடைத்த தகவலை கவனத்திற் கொண்டு கல்வி அமைச்சு மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

திங்கட்கிழமை, 25 ஜனவரி 2021
/
Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்