2022.07.19 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிவித்தலின் பிரகாரம், மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டப் பொறுப்பு பிரதி/ உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சகல அதிபர்களுக்கும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம், 2022 ஜூலை 25 ஆம் திகதி திங்கட்கிழமை அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதுடன், மறு அறிவித்தல் வரையில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளை நடாத்துவதற்கும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான செயற்பாடுகளும் வழங்கப்படும். அல்லது இணையவழி மூலமான கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.