பின்புலம் 
நெணச தொலைக் காட்சி கல்வி ஒளிபரப்பு இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் ஒளிபரப்பப்படும் தொலைக் கல்வி வேலைத் திட்டமாகும். இந்த தொலைக் கல்வி வேலைத் திட்டம் DIALOG தொலைக் காட்சிச் சேவையின் ஊடாக கல்வி அமைச்சுக்காக ஒளிபரப்பப்படுவதுடன் அது டயலக் நிறுவனத்தின் முற்று முழுதான கூட்டான சமூகப் பொறுப்புடன் (Cooperate Social Responsibility) இடம் பெறும் சேவையாகும்.

நோக்கம் 
இதன் ஒரு முக்கிய நோக்கம் என்னவென்றால், நல்ல திறமையுடன் ஆசிரியர்கள் பாட அறிவு மற்றும் அனுபவத்தை தீவு முழுதும் பரந்துள்ள சகல பிள்ளைகளுக்கும், குடிமக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதாகும். அத்துடன் பாடசாலை மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட கலைவடிவ வேலைத் திட்டம் விசித்திரங்கள், அறிக்கை வேலைத் திட்டம் என்பன நெணச ஊடாக ஒளிபரப்புவதற்கு நறடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒளிபரப்புதொடர்பானது
இங்கு இரண்டு நெனசஅலைவரிசைகள் டயொலொக் தொலைக்காட்சியினூடு ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. தரம் 10 இற்குறிய கற்பித்தல் நிகழ்சிகள் நெனசஅலைவரிசை 25 ஊடாகவும்தரம் 11 இற்குறிய கற்பித்தல் நிகழ்சிகள் நெனசஅலைவரிசை 26 ஊடாகவும் பாடசாலைவேளையில் ஒளிபரப்பப்படுகின்றது. பாடசாலை நிறைவடைந்த பின் அதாவது பிற்பகல் 1.30மணிக்கு பின் அன்றய நிகழ்சிகளின் மறுஒளிபரப்பு ஒளிபரப்பப்படும்.

 

ஒளிபரப்பப்படும் பாடங்கள்

 • வணிகக் கல்வியும் கணக்கியலும் 
 • தமிழ் 
 • முதலாம் மொழி – சிங்களம் 
 • விஞ்ஞானம் 
 • கணிதம் 
 • ஆங்கிலம்
 • தொழில்முயற்சிக் கல்வி 
 • புவியியல் 
 • வரலாறு 
 • தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பம் 
 • குடியற் கல்வி

 

பாடத்திட்டம்மற்றும்பாடங்களின்உருவாக்கம்

தரம்  10 மற்றும் 11 இற்குறிய பாடங்கள் பாடஆசிரியஆலோசகர்களின் உதவியுடன் தேசியகல்விநிறுவகம் மற்றும் தரமவாஹினி அரக்கட்டளை நிலையத்தினால் தயாரிக்கப்படுகின்றது. பின்னர் தேர்ச்சிமட்டம், பாடத்திட்டம், பாடப்புத்தகத்திற்கு அமைவாக ஒவ்வொரு பாடத்திற்குமுரிய காலஅட்டவணை தயாரிக்கப்படுகின்றது.

 

நேரஅட்டவணை

இடைவேளை மு.ப 10.30 -10.50 வரை வழங்கப்படும் இவ்வேளையில் வினாவிடை நிகழ்சிகள் கல்விசார் வேறுபட்ட நிகழ்சிகள் ஒளிபரப்பப்படும். மேலதிகமாக பார்வையாளர்களின் வேண்டுகோலுக்கிணங்க பொதுவிடுமுறைநாட்களில் கணிதம்,விஞ்ஞானம்,ஆங்கிலம்,சிங்களம் போன்றபாடங்கள் மீள்ஒளிபரப்பு இடம்பெறும்.

            புதிய நேரஅட்டவணை தரம் 10 இற்கான புதியபாடத்திட்டம்தரம் 11 இற்கான பழையபாடத்திட்டம் 04.01.2016 இல் இருந்து அமுல்படுத்தப்படும்.மற்றும் இரண்டாம் மூன்றாம் தவணைக்குறிய நேரஅட்டவணை தயாரிக்கப்பட்டுவருகின்றது.ஒவ்வொரு தவணையினதும் இறுதி இரண்டு வாரங்களும் பரீட்சை காரணமாக மீள்ஒளிபரப்பு, மீட்டல் நிகழ்சிகள் என்பன ஒளிபரப்பப்படும். மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்பட்ட நடன, சங்கீத நிகழ்சிகளும் ஒளிபரப்பப்படும்.

 

 

பாடங்களின் உருவாக்கமும் தயாரிப்பும்

பாடங்களை உருவாக்குவதிலும் வடிவமைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகம் தர்மவாஹினி அரக்கட்டளை நிலையம் அரசபாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் தேசிய கல்வி நிறுவக விரிவுரையாளர்களின் பங்களிப்பு செய்கின்றனர்.


பார்வையாளர்களின் ஆலோசனைகள் தேவைகள் மற்றும் யோசனைகள்

நெனச கல்வி நிகழ்ச்சி பாடசாலை மாணவர்களுக்கான உதவும்கரமாக செய்படுவதே கல்வியமைச்சின் எதிர்பார்ப்பாகும். ஆகவே அனைத்து பார்வையாளர்களும் இவ்எதிர்பார்ப்பை நிறைவேற்ற பங்களிக்கமுடியும். நீங்கள் ஓர் ஆசிரியரானால் நீங்களும் இவ் நிகழ்சிக் குறியபாடஙகளை தயாரிப்பதில் பங்களிக்க முடியும். நீங்கள் ஓர்பார்வையாளராயின் உங்களுடைய கருத்துக்கள் எதிர்பார்புக்கள் பாடங்கள் எவ்விதம் அமைய வேண்டும் என்பதனை எமக்கு தெரிவிக்க முடியும்.

ஒவ்வொரு தவணையின் முடிவின் பின்னர், தவணைப்பரீட்சை இடம்பெறும் காலங்களில் இவ் பாடங்கள் ஒளிபரப்பப்பட மாட்டாது. உங்களால் வேண்டுகோல் விடப்படுமிடத்து உங்களால் தவரவிடப்பட்ட நிகழ்சிகளின் மீள் ஒளிபரப்பிற்கு அக்காலகட்டத்தில் எம்மால் முடிந்த பங்களிப்பினை வழங்குவோம். (ஆனால் வார இறுதி நாட்கள் தவிர்ந்த ஏனைய பொதுவிடுமுறை நாட்களில் மாத்திரம் ஒளிபரப்பப்படும்) 

அதற்கு அமைய மேலேயுள்ள தேவையின் காரணமாகவோ வேறு தேவையின் காரணமாகவோ கீழ் வரும் வகையின் ஊடாக எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

 

கல்விப் பணிப்பாளர்
நெணச அலகு
கல்வி அமைச்சு
“இசுருபாயா”
பத்தரமுல்லை

 

மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தொலைபேசி இலக்கம் - 011-7209354 / 011-7209719
தொலை நகல் - 011-2785821